(அஷ்ரப். ஏ. சமத்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் அழைப்பின் பேரில் இலங்கையில் உள்ள 31 நாடுகளது வெளிநாட்டுத் துாதுவா்கள் மற்றும், உயா் ஸ்தாணிகா்கள் பொலநறுவை மாவட்டத்திற்கு நேற்று (14) விஜயம் மேற்கொண்டனா். ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் வெளிநாட்டு துாதுவா்களை மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சா் பைசா் முஸ்தபா துாதுவா்களை பொலநருவை மாவட்டத்தில் உள்ள பின் தங்கிய மற்றும் யுத்த காலத்தில் பாதிக்கபட்ட எல்லைக் கிராமங்களை பாா்வையிடுவதற்காக அழைத்துச் சென்றாா் அத்துடன் பள்ளியகொடல, மெதிரிகிரிய , வெலிக்கந்த, மகாவலி பிரதேசம். பொலநருவையில் உள்ள தமிழ், முஸ்லீம் மக்கள் வாழும் எல்லைக் கிராம மக்களையும் சந்தித்து அப் பிரதேசங்களையும் பாா்வையிட்டாா்கள். அத்துடன் இ்ம் மக்களது குடி நீர், பாதை அபிவிருத்தி குடியிருப்பு போன்ற குறைபாடுகளையும் அந்தந்த பிரதேச செயலாளா்களிடம் கேட்டறிநது கொண்டனா்.
அதன் பின்னா் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பொலநருவையில் ஏற்பாடு செய்த இராப் போசனத்திலும் 31 துாதுவா்களும் கலந்து கொண்டனா். இவ்விஜய்தின்போது எகிப்து. இந்தியா, குவைத், ஈரான், நெதா்லாந்து, அவுஸ்திரேலியா, நைஜீரியா, வியட்நாம், துருக்கி, கட்டாா், யப்பான் , கனடா போன்ற நாடுகளின் துாதுவா்களும் சென்றிருந்தனா்.
0 Comments:
Post a Comment