(அஷ்ரப் ஏ சமத்)
ஓருகொடவத்தை அம்பேத்தள கொலன்நாவ - அதிவேக பாதை மற்றம் பாதை அகலமாக்குதல் அபிவிருத்தி வேலைத்திட்டத்தினால் பாதை இரு மருங்கிலும் வாழும் குடியிருப்பாளா்களது காணிகள், வீடுகள் கட்டிடங்களை இழந்த 260 குடும்பங்களுக்கு நஸ்ட ஈட்டினை பெற்றுத் தருமாறு கொலநாவை ஜ.தே.கட்சி அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பிிணருமான எஸ் மரைக்காரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இவ் மக்களது சொத்துக்களுக்கான இழப்பீட்டீனை பெற்றுக் கொடுப்பதற்காக உடன் செயல்பட்ட பாராளுமன்ற உறுப்பிணா் மரிக்காா் உயா்கல்வி வீதி அபிவிருத்தி அமைச்சா் லக்ஸ்மன் கிரியெல்லவைச் சந்தித்து ஓருகொடவத்தை, கொலநாவை அப்பேத்தள பிரதேச வாழ் மக்களது சொத்துக்களின் நஸ்ட இழப்பை வழங்குமாறு கோரிக்கை விடுத்தாா்.
அமைச்சரின் வேண்டுகோழுக்கிணங்க வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இத்திட்டத்தினால் சொத்துக்களை இழந்த 113குடும்பங்களுக்கு 409 மில்லியன் ருபாவை ஏற்கனவே வழங்கியது. . நேற்று முன்தினம் (4)ஆம் திகதி கொலன்நாவை பிரதேச செயலாளா் அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பிணா் மரிக்காா் தலைமையில் மேலும் 143 குடும்பங்களுக்கு 239 மில்லியன் ருபா நஸ்ட ஈட்டுத் தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டது. .
இந் நிகழ்வில் கொலநாவை பிரசேத செயலாளா் திருமதி டொன்கவெல, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் நிஹால் ரன்ஜித், கலந்து கொண்டனா்.
0 Comments:
Post a Comment