மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேசத்தில் இம்முறை சிறுபோக நெற்செய்கை 22689 ஏக்கர் நிலப்பரப்ப்ல் மேற்கொள்ளப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
போரதீவுப்பற்று பிரதேசத்தில் இவ்வருடம் மேற்கொள்ளவிருக்கின்ற சிறுபோக நெற்செய்கைக்கான ஆரம்பக் கூட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் செவ்வாய் கிழமை (01) போரதீவுப்பற்று பிரதேச சயெலாளர் என்.வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சிறுபோக நெற்செய்கைக்குரிய ஆரம்ப வேலைகள் 01.03.2016 அன்று ஆரம்பித்தல், விதைப்பு வேவைகள் 15.03.2016 அன்று தொடங்கி 31.03.2016 இற்குள் முடித்தல், 2 சில்லு உழவு இயந்திரத்திற்குரிய கூலி ஏக்கருக்கு 1200 ரூபாவும், 4 சில்லு உழவு இயந்திரத்தின் கூலி ஏக்கருக்கு 4000 ரூபாவும், கூலி ஆள் ஒருவருக்கு நாள் ஒன்றிற்கு 800 ரூபாவும், விதைப்பு நடைபெறும் இடங்களிலுள்ள கால்நடைகளை எதிர் வரும் 15.03.2016 இக்கு முன்னர் அப்புப்படுத்துதல் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், எஸ்.வியாளேந்திரன், கிழக்கு மகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெத்தினம், மா.நடராசா, கோ.கருணாகரம், ஞா.கிருஸ்ணபிள்ளை, மற்றும் மாவட்ட மேலத்திக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், விவிசாயிகள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment