தற்போது வெளியாகியுள்ள கல்விப் பொதுத்தராதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்.தாளங்குடா ஸ்ரீ விநாயக வித்தியாலத்தில் 20 மாணவர்கள் கல்விப் பொதுத்தர
உயர்தரம் கற்பதற்குத் தககுதி பெற்றுள்ளதாக அவ்வியத்தியாலய அதிபர் சா.மதிசுதன் தெரிவித்துள்ளார்
33 மாணர்கள் கல்விப் பொதுத்தராதரப் பரீட்சைக்குத் தோற்றினர் இவர்களுள் சுந்தரலிங்கம் மிதுசிக்கா எனற மாணவி 8ஏ 1பி சித்திகளைப் பெற்றுள்ள இந்நிலையில் ஏனைய 20 மாணவர்கள் உயர்தரம் கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர். கடந்த வருடத்தை விட இம்முறை இரண்டு மடங்கு கல்விப் பொதுத்தராதரப் பரீட்சிப் பெறுபேறு உயர்ந்துள்ளதாக வித்தியாலய அதிபர் சா.மதிசுதன் மேலும் தெரிவித்தார்.
கடந்த 10 வருடத்திற்கு மேலாக பொதுத்தராதரம் வரையுள்ள இப்பாடசாலையில் இருந்துவருகின்ற இந்நிலையில், இவ்வருடம் கல்விப் பொதுத்தர உயர்தர வகுப்பை ஆரம்பிக்க கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
0 Comments:
Post a Comment