17 Mar 2016

ஸ்ரீலமுகா வின் 19வது தேசிய மாநாட்டுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

SHARE
ஸ்ரீலமுகா வின் 19வது தேசிய மாநாட்டுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி 

ஸ்ரீலமுகா கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்

அம்பாறை பாலமுனை பொது விளையாட்டுத் திடலில் சனிக்கிழமை 19.03.2016 காலையிலிருந்து இரவு வரை இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19வது தேசிய மாநாட்டிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக ஸ்ரீலமுகா கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு 
மாகாண முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இதற்கமைவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டுக்கான முன்னாயத்த கலந்தாலோசனைக் கூட்டங்கள் முன்னதாகவே நாடு பூராகவும் இடம்பெற்றதெனவும் அவர் கூறினார்.

இந்த மாநாட்டுக்கு நாடாளாவிய ரீதியில் இருந்து கட்சி ஆதரவாளர்கள், அபிமானிகள், சமூகத் தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 25 ஆயிரம் பேரை பங்குபற்றுநர்களாக எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்ஹ முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட பெருந்தலைவர்களும், வெளிநாட்டுத் தூதுவர்களும், கட்சிகளின் தலைவர்களும் அதிதிகளாக அழைக்கப்பட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: