20 Mar 2016

சட்டவிரோதமாக மணல் அகழ்ந்த 13 உழவு இயந்திரங்கள் மற்றும் பெக்கோ இயந்திரம் கைப்பற்றல்

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் ஆயித்தியமலைப் பொலிஸார் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 13 உழவு இயந்திரங்களையும் அகழப்பட்ட மண்ணையும் மண் அகழ்வுக்குப் பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரத்தையும் கைப்பற்றியதோடு இந்த இயந்திரங்களின் 14 சாரதிகளையும் வெள்ளிக்கிழமை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள புத்தம்புரிப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறுவது குறித்து பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் ஏறாவூர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்தினவின் பணிப்புக்கமைவாக இந்த சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டன.

இச்சம்பவம் குறித்து ஆயித்தியமலை மற்றும் கரடியனாறு பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

உழவு இயந்திரம் மற்றும் பெக்கோ இயந்திரத்தின் உரிமையாளர்கள், சாரதிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.







SHARE

Author: verified_user

0 Comments: