கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் முயற்சியால் திருகோணமலை ,மூதூர் கிழக்கு சீதனவெளிக் கிராமத்தில் 10 கோடி ரூபாய் செலவில் புதிய ஆடைத் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு புதன் கிழமை ( 02) நடைபெற்றது.
இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ணசிங்கம், மாகாணசபை உறுப்பினர்களான கு.நாகேஸ்வரன், ஜெ.ஜெனார்த்தனன், அர்.எம்.அன்வர், ஹமீடியா நிறுவன தலைவர் ஜனாப் பாயிஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

3.5 ஏக்கர் காணிப்பரப்பில் 100 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இருக்கின்ற குறித்த ஆடைத் தொழிற்சாலை மூலம் 350 இளைஞர், யுவதிகளுக்கு நேரடியாக வேலைவாய்ப்பை வழங்க முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்வரும் காலங்களில் நவீன முறையில் விஸ்தரிப்பு செய்வதற்காக இலங்கையின் பிரபல ஆடை உற்பத்தி நிறுவனமான ஹமீடியா உட்பட தனியார் முதலீட்டாளர்களை உள்வாங்கி 1000க்கு மேற்பட்ட யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான பாரிய தொழிற்சாலையாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார் .
0 Comments:
Post a Comment