5 Feb 2016

புதிய அரசாங்கத்தின் கீழ் சமாதான காற்றைச் சுவாசித்துக் கொண்டிருக்கின்றோம். பிரதேச செயலாளர் கோபாலரெத்தினம் (வீடியோ)

SHARE
இலங்கையிலுள்ள மூவின மக்களுக்கும் சுதந்திரம் பெற்ற நாளாகும், இந்நிலையில்தான் நாம் 68 வது சுதத்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். இந்நிலையில்தான் கடந்த காலங்களில் பட்ட இன்னல்கள் துன்பங்கள் அனைத்தும் நீங்கி புதிய அரசாங்கத்தின் கீழ் சமாதான சுவாசக்காற்றைச் சுவாசித்துக் கொண்டிருக்கின்றோம்.
இந்நாட்டிலே உள்ள தமிழர், முஸ்லிம், சிங்களவர், பறங்கிர் என னைவரும், சந்தோசமாக இந்நாட்டில் வாழக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. என மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தெரிவித்தார்.

இலங்கையின்  68 வது சுதந்திரதினம் நாட்டின் பல பாகங்களிலும், வியாழக்கிழமை (04) இடம்பெற்றது. அந்த வகையில மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் களுவாஞ்சிகுடி பொலிசாருடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சுதநிதிர தின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்ககும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….

இந்நாடு சுதந்திரம் பெறுவதற்காகவேண்டி சேர்.பொன் இராமநாதன், அருணாசலம், ஜே.ஆர்.ஜெயவர்த்தன, பண்டாரநாயக்கா, போன்றவர்கள் இணைந்துதான் இந்நாட்டுக்குள் அனைத்து மக்களும், ஒன்றுபட்டு வாழக்கூடிய சுதந்திரத்தைப் பெற்றுத் தந்துள்ளார்கள். 

1505 ஆம் அண்டு தொடக்கம், 1948 ஆம் ஆண்டு வரைக்கும், இலங்கை நாடு அன்னிய நாட்டுக்கு அடிமைப்பட்டு, அன்னிய கலாசாரத்திற்கு உட்பட்டிருந்தது. இந்நாட்டி பல வளங்கள் காணப்பட்ட போதிலும், அவைகளனைத்தும் அக்காலத்தில் அன்னியர்களால் சுரண்டப்பட்டு வந்திருந்தன. இதனால் இங்கு எமது மக்கள் சுதத்திரமாக வாழமுடியாமலிருந்தது. அதனடிப்படையில் வெளையனே வெளியேறு என்று கோசமிட்டு, இந்நாட்டைய ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேயரையும், போத்துக்கீசரையும், வெளியேற்றியதன் பயனாக இன்று நாம் சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்நிலையில் இலங்கை நாட்டிலே புதிய அரசு உருவாக்கபட்டு இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசின் கீழ் மிகவும் சிறந்த முறையில் நாடு முன்னேறிச் சென்று கொண்டிருக்கின்றது.என அவர் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: