4 Feb 2016

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் சுதந்திர தின நிகழ்வு

SHARE
இலங்கையின்  68 வது சுதந்திரதினம் நாட்டின் பல பாகங்களிலும், இன்று வியாழக்கிழமை (04) இடம்பெற்று வரும் இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும், அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களினால் முன்னின்று நடாத்தப்பட்டன.
அந்த வகையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் களுவாஞ்சிகுடி பொலிசாருடன் இணைந்து பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம்,  சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது.

இதில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி சரத் நந்தலால், பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கர், மற்றும், பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பிரதேச அபிவிருத்தி வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுதந்திர தின வைபவம் குருக்கள்மடம் அஸீஸி இல்லத்தில் இடம்பெற்றது. இதில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள், பிரதேச செயலாளர் கோ.பாலரெத்தினம், களுவாஞ்சிகுடி பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அஸீஸி இல்ல வளாகத்தில் பயன்தரும் மரங்களும் நடப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச திணைக்களக் காரியாலயங்கள், பெரும்பாலான தனியார் கடைகள், வீடுகளிலும், தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளதனையும், வாகனங்களிலும் தேசியக் கொடி பறக்க விடப்பட்டுள்ளதனையும், அவதானிக்க முடிகின்றது.











SHARE

Author: verified_user

0 Comments: