செட்டிபாளையம் மாகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி வித்தியாலய முதல்வர் அ.அருள்ராசா தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதிகளாக பாரளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராசா, ஆகியோர் மற்றும் பட்டிருப்பு கல்விவலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் பீ.காப்தீபன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் வீ.திரவியராஜா, ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் சோழன் இல்லம் முதலாம் இடத்தினையும், சேரன் இரண்டாம் இடத்தினையும், பாண்டியன் இல்லம் மூன்றாம் இடத்தினையும், பெற்றுக் கொண்டது.
0 Comments:
Post a Comment