மட்.பட்.மகிழூர் சரஸ்வதி மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி வியாழக் கிழமை மாலை மகிழூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் என்.புட்பமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராசா, பட்டிருப்பு கல்வி வலய பிரதித்திட்டப் பணிப்பாளர்களான பி.காப்தீபன், கே.ஜெயந்திமாலா,உட்பட கல்வி அதிகாரிகள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மூன்று இல்லங்களுக்கிடையில் நடைபெற்ற இவ்விளையாட்டுப போட்டியில் விபுலானந்தா இல்லம் 572 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும், இராமகிருஷ்னா இல்லம், 539 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், விபுலானந்தா இல்லம் 437 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது. இவ்விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கேடையங்களும், சான்றிதழ்கழும் வழங்கப்பட்டன.
0 Comments:
Post a Comment