29 Feb 2016

தற்போது வடகிழக்கிலே குற்றச்செயல்கள் அதிகரிக்கப்படுகின்றன.

SHARE
தற்போது வடகிழக்கிலே காலாசாரங்கள் மாற்றப் படுகின்றன. குறச்செயல்கள் அதிகரிக்கப் படுகின்றன, பாடசாலை மாணவிகள் மத்தியில் வன்புணவர்க நடந்தேறி வருகின்றன. அன்று யாழ்ப்பாணத்திலே ஒரு வித்தியா, நேற்று வவுனியாவிலே ஒரு கிருஷ்ணவி, இன்னும் எத்தனையோ காத்திருக்கின்றதோ எமக்குத் தெரியாது. 


என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோ.கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்.திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி வெள்ளிக் கிழமை (26) மாலை திருப்பழுகாமம் மைதானத்தில் வித்தியாலய அதிபர் எஸ்.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….

மாணவர்கள், இளைஞர்கள் மர்திரமல்ல, முதியவர்களும். உடற் பயிற்சிகளில் ஈடுபட்டால் நாட்டில் சுகாதாரத்திற்கு ஓதுக்கீடு செய்கின்ற நிதியைக் குறைக்கலாம்.  இந்நிலையில் எமது பிரதேசங்கள் உரியமுறையில் அபிவிருதி செய்யப்பட வேண்டுமாக இருந்தால் இந்நாட்டில் சமர்ஸ்ட்டி ஆட்சி கொண்டுவரப்படல் வேண்டும். கடந்த ஜனவரி 9 ஆம் திகதி இந்நாட்டு நாடாளுமன்றம் ஒரு அரசியல் சாசன சபையாக மாற்றப்பட்டுள்ளது. இதனூடாக தனிமனித அராஜக ஆட்சி இல்லாமல் செய்யப்பட்டு, ஜனாதிகதிக்கு உள்ள அதிகாரங்கள் குறைக்கப்பட விருக்கின்றன.

புரையோடிப் போயுள்ள எமது இனப்பிரச்சனைக்கு தீர்வு  காண்பதற்கு மாவட்டம் தோறும், ஒருகுழு மக்களிடம் சென்று ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டு வருகின்றது.

1989 ஆம் அண்டுக்கு முன்னர் இந்த நாட்டிலே நடைபெற்ற பழைய தேர்தல் முறைமை தற்போது புதிய தேர்தல் முறைமையாகக் கொண்டு வரப்பட விருக்கின்றது. இந்நிலையில் இலங்கை நாட்டுக்கு புதிய அரசியல் யாப்பு வரையப்பட்டு இனப்பிரச்சனைக்கான தீர்வும் வரவிருக்கின்றது. அத்தோடு அதிகாரப் பரவலாக்கலும், இவ்வருடத்திற்குள் வரவிருப்பதாக எமது தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார். 

எனவே இவ்வாண்டு இறுதிக்குள் எமது இனப்பிரச்சனைக்கான தீர்வுகள் வரவேண்டும், அதனூடாக அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். அவற்றுள் காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம், என்பன எமது கைக்கு வரவேண்டும்.

தற்போது வடகிழக்கிலே காலாசாரங்கள் மாற்றப ;படுகின்றன. குற்றச்செயல்கள் அதிகரிக்கப் படுகின்றன, பாடசாலை மாணவிகள் மத்தியில் வன்புணவர்கள் நடந்தேறி வருகின்றன. அன்று யாழ்ப்பாணத்திலே ஒரு வித்தியா, நேற்று வவுனியாவிலே ஒரு கிருஷ்ணவி, இன்னும் எத்தனையோ காத்திருக்கின்றதோ எமக்குத் தெரியாது. 

இவ்வாறான குற்றச்செயர்களை ஆயுதப் படைகளும், பொலிசாரும், கண்டும் காணாததுமாக இருக்கின்றார்கள், குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் தாமதம் செய்கின்றார்கள். மாகாண ஆட்;சிகட்குள் பொலிஸ் அதிகாரம் இருந்திருந்தால், எமது மாணவிகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்புணர்வாணர்களை உடன் கைது செய்திருக்க முடியும். 

எனவே எது எவ்வாறு அமைந்தாலும், எமது மாணவர்களின் கல்வித்தரங்களை உயத்தினால்தான் எமது அழிந்துபோன உயிர்களைத்தவிர அனைத்தையும் மீளப்பெற்றுக் கொள்ளமுடியும்.  கடந்த காலங்களில் இந்த நாட்டை தமிழ் அரசர்கள் ஆண்டிருப்பதாக பல சரித்திரங்கள் கூறுகின்றன. எனவே மாணவர்கள் சிறந்த கல்விமான்களாகவும், ஒழுக்கசீலர்களாகவும் மிளிர வேண்டும் என அவர் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: