24 Feb 2016

அம்பாறை மாவட்ட தமிழ் மொழி தொண்டராசிரியா் குழு கிழக்கு மாகாண கிழக்கு முதலமைச்சருடன் கலந்துரையாடல்

SHARE
இதன் போது அம்பாறை மாவட்ட தொண்டா் ஆசிரியா் சங்க தலைவா் .எம்.பௌபுா் தொண்டா் ஆசிரியா்களின் குடும்ப சூழ்நிலை தொடக்கம் எவ்வித ஊதியமுமின்றி கடமையாற்றி வந்த நிலையில் இன்று கைவிடப்பட்ட நிலையில் இவா்கள் பாரிய துன்பத்தினை எதிா்நோக்குவதாக சுட்டிக்காட்டினாா்.


இதனை கருத்திற் கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இந்த தொண்டா் ஆசிரியா்கள் தமது வாழ்வாதாரத்தினை பாரிய சவாலுக்கு மத்தியில் கொண்டு செல்லும் நிலையினை மாற்றி அமைப்பதற்காக இது தொடா்பான உடனடி தீா்வு பெற்றுக் கொடுக்க விசேட கவனத்தினை செலுத்தி உரிய அதிகாரிகளுக்கு முழுமையான தரவுகளை திரட்டும் படியும் மிகக்குறுகிய காலத்தில் இத் தொண்டா் ஆசிரியா்களின் பிரச்சினைக்கான முழுமையான தீா்வு கண்டு கொடுக்க கல்வி அமைச்சு , கல்வி அமைச்சின் செயலாளா்மாகாண பணிப்பாளா்களுக்கு பணிப்புரை விடுப்பதுடன் , மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த அவல நிலையினை கிழக்கு மாகாணத்தில் முற்றாக தீா்வு கண்டு கொடுக்க முழு ஏற்பாடுகளை.யும் செய்து கொண்டிருப்பதாகவும் முதலமைச்சா் தெரிவித்தாா்.




SHARE

Author: verified_user

0 Comments: