நெல் களஞ்சியப்படுத்தலுக்காக கடந்த வருடங்களில் 7 நெற் களஞ்சியசாலகள் அமைக்கப்பட்ட போதும் அவை சாரியான வகையில் பாவனைக்குட்படுத்தப்படவில்லை இருந்தாலும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அமைவாக நெல் கொள்வனவு சம்பந்தமாக பிரதமருக்கு அறிவிக்கப்படும் என்று மட்டு. மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் விசாயிகளால் முன்வைக்கப்பட்ட தற்போது நடைபெற்று வரும் பெரும்போக அறுவடை நெல் விற்பனையில் எதிர் கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் முறையிட்டு போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர்,
வங்கிகள் விவசாயிகளுக்கு கடன்களை வழங்குவதற்கு மத்திய வங்கி நிதிகளை வழங்குகிறது, அதே நேரத்தில் வட்டிவிகிதங்களில் குறிப்பிட்ட வீதத்தினை மத்திய வங்கி செலுத்துகின்றது. இந்த நிலையில் சில வங்கிகள் விவசாயிகளுக்கான கடன்களை வழங்குவதில் ஆர்வம் காட்டுவது குறைவாகக் காணப்படுகிறது.
நெல் சந்தைப்படுத்தல் சபை விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவில் ஈடுபட வேண்டும். இது தொடர்பிலான விவசாயிகளது கோரிக்கைகளை பிரதம மந்திரிக்கு அனுப்பி வைப்பதுடன் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்ளை வெளியிட்டார்.
இன்றைய கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மாவட்ட விவசாயப்பணிப்பாளர் ஆர்.சிவநேசன் ஆகியோரும் பங்கு கொண்டதுடன், பிரNதுச செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள், விவசாயப் பொதனாசிரியர்கள், விவசாயச் சம்மேளனங்களின் பிரதிநஜதிகள் உள்ளிட்டேர்ரம் கலந்து கொண்டனர்.
இன்று வியாழக்கிழமை காலை முதல் பகல் வரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வங்கிகள் விவசாயக்கடன் வழங்குதல், விவசாயக் காப்புறுதி, விவசாயத்திணைக்களம், நீர்ப்பாசனத்திணைக்களம், கமநல அபிவிருத்தி, தேசிய உரச் செயலகம், விதை மற்றும் நடுகை பொருட்கள் அபிவிருத்தி, விதை அத்தாட்சிப்படுத்தல், கால்நடை உற்பத்தி, கடற்தொழில், தென்னைப் பயிர்ச்செய்கை, வனவளத்திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களது பிரச்சினைகள், கடந்த வருடச் செயற்பாடுகள் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.
0 Comments:
Post a Comment