தேசியம் பேசி பேசி எமது தமிழினம் தேய்ந்து போய்க் கொண்டு இருக்கின்றது இதனை விடுத்து முன்னைய காலத்தினைப் போன்று எமது தமிழினம் மறுமலச்சி அடையவைப்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை(வெள்ளிமலை) அவர்கள் தெரிவித்தார்
மட்டக்களப்பு செட்டிபாளையம் மகா வித்தியாலயதின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி அதிபர் அ.அருள்ராசா தலமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்காலத்தில் பெற்றோர்கள் மாணவர்களுக்கு தூக்க முடியாத கற்றல் சுமையை கொடுத்துவருதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அதாவது பெற்றோருக்கு பெற்றோர் போட்டியில் ஈடுபடுகின்றனரே ஒளிய அவர்கள் தூக்கக் கூடிய சுமையை அறிந்து பிள்ளைகளை வழிப்படுத்துவதில்லை இதனால் சிறுவயதினிலேயே மாணவர்களுக்கு கல்வி மீது வெறுப்பு உண்டாகின்றது. இதனை விடுத்து பெற்றறோர்கள் பிள்ளைகளுக்கு தூக்கக்கூடிய சுமையினை வழங்கி அவர்களை வழிப்படுத்த வேண்டும். எமது இனம் கல்வியில் நிற்சயமாக முன்னேற வேண்டும் முன்னைய காலத்தில் அரச உயர்பதவிகளில் இருந்தவர்கள் தமிழர்களே அந் நிலை தற்போது மாறியுள்ளது. எனவேதான் நாங்கள் கல்வியில் நிற்சயமாக முன்னேற வேண்டும் இதனூடாகத்தான் இழந்தவற்றை பெறமுடியும்.

நமது இனத்திலே ஒற்றுமையில்லை இதற்கு காரணம் மதப் பெரியார்களோ, கல்விமான்களோ, அரசியல்வாதிகளோ, தனவந்தர்களோ தூரநோக்குடனோ, நல்ல திட்டமிடலோடோ செயற்படுவதில்லை மாற்று இனம் சிந்திப்பது போன்று சிந்திப்பதில்லை அவர்களும் தங்கள்பாடுமாக வாழ்த்து கொண்டு இருக்கின்றனர். இதனால்தான் இன்றுவரை நாங்கள் தேசியம் பேசி பேசி தேய்ந்து போய் கொண்டு இருக்கின்றோம். ஆகவே கடந்தகாலம் போன்று எமது இனம் வளர்ச்சி பெறுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முன்வரவேண்டும் என்பதுடன் இதற்கான உறுதிமொழியையும் இன்றே எடுத்து செயற்படவேண்டும்
0 Comments:
Post a Comment