அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்
இந்தப்பிரதேசத்திலே எந்த பள்ளிவாசலும் செய்யாத ஒரு சிறந்த உயரிய வேலையை மீராவோடை ஜூம்மா பள்ளிவாசல் செய்திருக்கிறது, புலமை பெற்ற மாணவர்களையும் அதற்கு உந்து சக்தியாக பின்னனியில் இருந்து செயற்பட்ட ஆசிரியர்களையும் கெளரவிக்கும் இந்த நிகழ்வானது நல்லதொரு பன்பாடாகும் , நல்லதொரு முன்னுதாரணமாக இதனைக்கொள்ள முடியும்.இந்த மீராவோடை மண் கல்விச் செழுமையும்,வளமும் கொண்ட பிரதேசமாகும். கல்குடா பிரதேசத்தில் இந்த மீராவோடையில் இருந்தே முதலாவதாக நிருவாக சேவை உத்தியோகத்தர் சகோதரர் மர்ஹூம் உதுமான் அவர்கள் உருவாக்கினார்,
இந்தப்பிரதேசத்தில் முதன்முதலில் ஒரு நீதவானை உருவாக்கியது மீராவோடை மண் அதனால் தான் சொல்கிறேன் இயல்பாகவே இந்த மண்ணுக்கு கல்வி பற்றிய ஆழமான கரிசனை இருக்கிறது.
எந்தப்பெற்றோர் ஆசிரியர் சமூகத்துடன் நல்ல உறவைப் பேணுகின்றனரோ,எந்தப்பெற்றோர் ஆசிரியர்கள் பற்றி பிள்ளைகளின் மனங்களில் நல்லெண்ணங்களை விதிக்கின்றனரோ, எந்தப்பெற்றோர் ஆசிரியர் அதிபர்களுடன் கரிசனையோடு அவர்களை மதித்து நடக்கின்றனரோ அந்தப்பெற்றோரின் பிள்ளைகள் நல்ல கல்வியியலாளர்களாக வருவது உறுதியான விடயமாகும். எனவே பெற்றோர்கள் பாடசாலையுடன் அதிகமதிகம் நெருக்கம் உள்ளவர்களாக இருக்கவேண்டும்,
அப்போதுதான் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பிரகாசம் உள்ளதாக அமையும்.
இந்தக்கல்குடாவில் அரசியல் ரீதியாக ஒரு பிரதிநிதித்துவம் இருப்பதனால் தான் இந்த மீராவோடை அல் ஹியாவுடைய 25 மில்லியனை காப்பாற்ற முடிந்தது என்ற உண்மையை இந்த மேடையில் அமர்ந்திருக்கும் கற்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தேர்தல் காலங்களில் அமீர் அலி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அழைந்த நயவஞ்சர்கள் ஆகக் குறைந்தது அவர்கள் ஆதரித்தவர்களையாவது தூய்மையுடன் ஆதரித்து இருக்கலாம் ஆனால் இந்த கேவலமான நயவஞ்சர்களின் செயற்பாடு அவரும் வெற்றி பெறக்கூடாது இவரும் வெற்றிபெறக்கூடாது, யாருமே வெற்றி பெறாமல் இந்த கல்குடா அரசியல் அனாதையாக இருக்க வேண்டும் என்பதாகும். ஆனால் எல்லாம் வல்ல இறைவனுக்கு தெரியும் யாரை வைத்து என்ன செய்ய வேண்டுமென்று, சகோதர ர் ஹிஸ்புள்ளாஹ் தோல்வி அடைந்தார் இரண்டு வாரங்களில் தேசியப்பட்டியல் மூலமாக அவர் உள்வாங்கப்பட்டு கெளரவமாக இராஜாங்க அமைச்சுப்பதவியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது எனவே தான் நான் சொல்கிறேன் எந்த சூழ்ச்சியும்,நயவஞ்சக செயல்பாடும் வெற்றியையும் தோல்வியையும் கொண்டுவந்து விடாது மாறாக இறைவன் போட்ட கணக்குப்படியே எல்லாம் நடக்கும்.
என்னை தோக்கடிக்க கங்கணம் கட்டி களத்தில் இறங்கியவர்களின் எதிர்பார்ப்பு என்ன? அபிவிருத்திதான் அவர்களின் நோக்கமென்றால் அவர்கள் எதிர்பார்ப்பதையும்விட அதிகம் அபிவிருத்தி வேலைகளை நான் இந்தப்பிரதேசத்தில் செய்துள்ளேன்,
அவர்கள் எதிர்பார்ப்பதையும்விட அதிகம் இந்த பிரதேசத்தின்,இந்த மாவட்டத்தின் கல்விப் பிரச்சினை,காணிப்பிரச்சினை பற்றி கதைத்தும்,குரல் கொடுத்தும் இருக்கிறேன் எனவே மக்களை ஏமாற்றி அவர்களை வைத்து அரசியல் வியாபாரம் நடத்தும் சாக்கடைத்தனத்தை இனிமேலாவது கைவிட்டு நமது சமூகத்தின் உரிமையையும்,அபிவிருத்தியையும்,கல்வி முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு செயற்பட முன் வாருங்கள்.
நல்ல கல்விமான்கள்,நல்ல தொழிலதிபர்கள் ,நல்ல ஆசான்கள்,நல்ல சட்டத்தரணிகள்,நல்ல வர்த்தகர்கள்,நல்ல டொக்டர்கள் போன்றோரை உருவாக்குவது எத்துணை அவசியமோ அவ்வாறே நல்ல பண்புள்ள மனிதர்களையும் நாம் உருவாக்க வேண்டும்,அதற்கு சமூகத்தில் உள்ள எல்லாத்தரப்பினரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என அவர் கூறினார்.
முன்னாள் தவிசாளர் KBS.ஹமீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிரேஷ்ட விரிவுரையாளர் றிஸ்வி, சட்டத்தரணி ராசிக் பாடசாலை அதிபர்கள், பெற்றார்கள், பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments:
Post a Comment