14 Feb 2016

வளம் நிரம்பிய இலங்கைய உருவாக்க ஏனைய மதங்கள் போன்று முஸ்லிம் சமூகமும் பங்களிப்பை வழங்க முடியும் - அமெரிக்கத் தூதுவர்

SHARE
நல்லிணக்கமான, ஐக்கியமான, சமாதானமான மற்றும் வளம் நிரம்பிய இலங்கையை உருவாக்கும் பொன்னான நோக்கத்தை ஏற்படுத்துவதற்கு பௌத்தம், இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்கள் போன்று முஸ்லீம் சமூகமும் பங்களிப்பை வழங்கமுடியும் என்பதை நான்

உணர்ந்துள்ளேன். என  அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப் தெரிவித்துள்ளார். கொழும்பு பெரிய பள்ளி வாசலுக்கு வெள்ளிக்கிழமை (12) விஜயம் செய்த அவர் அங்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்..


பெரியபள்ளிவாசலிற்கு விஜயம் மேற்கொண்டு அதன் 1200 வருட வரலாறு குறித்து அறிந்துகொள்வதற்கு மாத்திரமல்லாமல், இலங்கையில் இஸ்லாமிய மதத்தின் செழிப்பான வரலாறு குறித்தும் அறிய முடிந்தமை மிகப்பெரும் வரப்பிரசாதமாகும். 

உலகிற்கு மிகப்பெரும் கலாசாரத்தையும், அறிதலையையும் அளித்த மதம் இஸ்லாம். தென் கிழக்காசியாவிற்கும், தென்னாசியாவிற்கும், மத்திய கிழக்கிற்கும், ஆபிரிக்காவிற்கும், உலகின் பல பகுதிகளிற்கும், அமெரிக்காவிற்கும் என உலகின் பல பகுதிகளிற்கும் தனது
கொள்கைகளையும், கருத்துக்களையும் கொண்டுவந்த மதம் இஸ்லாம்.
எனது ஜனாதிபதி சமீபத்தில் மேரிலான்டில் உள்ள பல்டிமோர் பள்ளிவாசலிற்கு விஜயம் மேற்கொண்டார். அந்த பள்ளிவாசலில் இருந்து உரையாற்றியவேளை அவர் அமெரிக்காவின் மிகப்பெரும் மத சுதந்திர வரலாற்றினை நினைவுபடுத்தினார். 

அமெரிக்காவின் தேசத் தந்தைகளான தோமஸ் ஜெவ்வர்சன், பெஞ்சமின் பிராங்கிளின், ஜோர்ஜ் வாசிங்டன் போன்றவர்கள் மத சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதை நினைவுபடுத்தினார். அவர்கள் அதனை
அமெரிக்காவின் அரசியல் அமைப்பில் பொதித்தனர்.

இன்று வரை அமெரிக்க மக்கள் அனைத்து மதங்களிற்கும் வழிபாட்டு சுதந்திரம் அவசியம் என்ற பெருநம்பிக்கையை கொண்டுள்ளனர். அனைத்து மக்களுக்கும் தங்கள் மனச்சாட்சியை பின்பற்றுவதற்கான உரிமை அவசியம் என அவர்கள் கருதுகின்றனர், அவர்களின் நம்பிக்கை எவ்வாறானதாகயிருந்தாலும், அமெரிக்க மக்களின் அடிப்படை கொள்கையாகவும் அடித்தளமாகவும் இதுவே காணப்படுகின்றது. ஆகவே இலங்கை மக்களினதும் இலங்கையினதும்
மத பன்முகத்தன்மை குறித்து அறிந்துகொள்வது எனக்கு மகிழ்ச்சியையும் கொடுத்த வைத்த உணர்வையும் அளிக்கின்றது.

அமெரிக்கர்கள் இலங்கை பற்றி நோக்கும் போது அவர்கள் இலங்கை மக்களின்
பல்வகைமையை காண்கின்றனர். மதங்கள், இனங்கள், மொழிகள் மற்றும் கலாசாரத்தை காண்கின்றார்கள். இலங்கையில் மக்கள் மத்தியில் ஐக்கியம் நிலவுவதை பார்க்கும் அவர்கள் இலங்கை மற்றும் அமெரிக்காவில் உள்ள பல்வகைமையிலிருந்தே நாங்கள் எங்கள் பலத்தை பெற்றுக்கொள்கின்றோம் என்பதை அவர்கள் உணர்கின்றார்கள்.

அமெரிக்கர்கள் என்ற வகையில் நாங்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், யூதர்கள் ஐக்கியமாக வாழ்வது எங்கள் தேசத்தை மேலும் பலமானதாக்குகின்றது என நாங்கள் கருதுகின்றோம். எங்கள் தேசிய முதுமொழியாக ஈபுளுபிரிஸ் உனும் (நு Pடரசiடிரள ருரெஅ)
காணப்படுகின்றது. பலதில் ஓன்று என்பதே இதன் அர்த்தம். எங்கள் பல்வகை மற்றும் உலகின்பல பகுதிகளிலிருந்தும் மக்கள் அமெரிக்கா வருவதை ஊக்குவிப்பதன் மூலம் -அவர்கள் கொண்டுவரும் விழுமியங்கள், நம்பிக்கைகள், பலங்கள் போன்றவற்றை போற்றுவதன் மூலம் அது எங்கள் நாட்டை மேலும் பலமானதாக்குகின்றது.

அமைச்சர், இமாம் மற்றும் மசூதியின் தலைமை அதிகாரி ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது இலங்கையில் இஸ்லாத்தின் பெரும் வரலாறு குறித்தும் அதன் 1000 வருட வரலாறு குறித்து அறிந்து கொள்வதற்கு பெரும் வாய்ப்பு கிடைத்தது. நல்லிணக்கமான, ஐக்கியமான, சமாதானமான மற்றும் வளம் நிரம்பிய இலங்கையை உருவாக்கும் பொன்னான நோக்கத்தை ஏற்படுத்துவதற்கு பௌத்தம், இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்கள் போன்று முஸ்லீம் சமூகமும் பங்களிப்பை வழங்கமுடியும் என்பதை நான்
உணர்ந்துள்ளேன். 

அனைத்து இலங்கையர்களும், மத, இன வேறுபாடுகளை கடந்து தங்கள் வாழ்க்கையை ஜனநாயக மற்றும் மனித உரிமைகளை தங்கள் பின்னணிகளை கடந்து அனுபவிக்கும் வாழ்க்கையை வாழும் நிலையை பெறலாம். 

நான் இந்த அழகிய மசூதிக்கு விஜயம் செய்வதற்கு கிடைத்த சந்தர்ப்பம் குறித்து பெருமையடைகிறேன். மசூதியை சுற்றிப்பார்த்தது, தலைமை அதிகாரியை சந்திக்க முடிந்ததை நான் பாராட்டுகிறேன். அமெரிக்க
தூதரகத்திற்கும், மசூதிக்கும் இலங்கை முஸ்லீம்களிற்கும் இடையிலான பல ஈடுபாடுகளில் இது ஆரம்பமாக அமையும் என நான் கருதுகின்றேன், என அவர் தெரிவித்துள்ளார்.


SHARE

Author: verified_user

0 Comments: