3 Feb 2016

முஸ்லிங்கள் தமிழ் அரசியல் வாதிகளிடமிருந்து அரசியலைக் கற்றவர்கள் - பிரதியமைச்சர் அமீரலி.

SHARE
(இ.சுதா)

கடந்த கால போராட்டத்தின் மூலமாக வடகிழக்கு தமிழ் மக்கள் தன்மானத்தினைத் தவிர பலவற்றினை இழந்திருக்கின்றனர். இனி இழப்பதற்கு எதுவும் கிடையாத நிலையில் வீர வசனங்களைப் பேசி உங்களை கபளீகரம் செய்ய நான் தயாரில்லை. இந் நாட்டில் வாழ்கின்ற மூவின மக்களும் வேறுபாடுகள் இல்லாத நிலையில் சமமாக வாழ்வதற்கான சுபீட்சம் உருவாகியுள்ள, நிலையில் சில அரசியல் வாதிகள் மக்கள் மத்தில் துவேசத்தன்iயினை தூண்டும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். இந் நிலை மாற்றமடைய வேண்டும். என கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமிர்அலி தெரிவித்துள்ளார்.


திஙகட் கிழமை (01) துறைநீலாவணை வடக்கு கண்ணகி சனசமுக நிலைய வீதி திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்

அவர் மேலும் கருத்து இதன்போது குறிப்பிடுகையில்…

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மட்டு மாவட்டத்தில் முன்னாள் பிரதியமைச்சர், சோ.கணேசமூர்த்தி போட்டியிட்டிருந்தார். ஆனால் அவர் அதில் தோல்வி பெற்றாலும் அவர் தனது சேவையிலிருந்து விலக வில்லை அப்படியான சந்தர்பத்தில் தமிழ் மக்களிடம் வீர வசனங்களை பேசி சிலர் மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர். அறிக்கைகளை விடுவதனால் விடயத்தினை சாதிக்க முடியும் என நினைக்கின்றனர். 

முஸ்லிங்கள் தமிழ் அரசியல் வாதிகளிடமிருந்து அரசியலைக் கற்றவர்கள் இதனை நான் மறுக்க வில்லை நிலைமைமாறி தற்போது முஸ்லிங்களிடமிருந்து அரசியல் கற்க வேண்டிய நிலைமை உருவாகி யுள்ளது. காரணம் வீர வசனங்களைப் பேசுவதனால் எதனையும் சாதிக்க முடியாது. தற்போது முஸ்லிம் கிராமங்கள் அபிவிருத்தியில் பாரிய முன்னேற்றமடைந்துள்ளது. காரணம் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கத்துடன் கைகோர்த்து பல அமைச்சுப்பதவியினை பொறுப் பேற்று பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் சந்தர்ப்பத்தில் தமிழ் அரசியல் வாதிகளில் சிலர் வீர வசனங்களை உரைக்கின்றனர். இதனால் கிடைப்பது ஒன்றுமே இல்லை, வெறுமனே தனித்து நின்று சிறுபான்மை இனத்தவர் எதனையும் பெற முடியாது.

தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் அதனை நான் எதிர்க்க வில்லை அதற்காக எமது அபிவிருத்தி இலக்கினை நாம் இழக்கக் கூடாது. 

தற்போது இலங்கையில் இருக்கக் கூடிய இருபத்தைந்து மாவட்டங்களில் மதுவுக்கு அடிமையான மாவட்டத்தில் மட்டக்களப்பு முதன்மை பெற்றுள்ளமை வேதனை தரக் கூடிய விடயமாகும். இவ்வாறான நிலைமையினை மாற்றி மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியில் பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.




SHARE

Author: verified_user

0 Comments: