24 Feb 2016

கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரிவு உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு அனர்த்த முகாமைத்துவ மீள்பயிற்சி

SHARE
கிராம அனர்த்த முகாமைத்துவக் குழுக்களின் தலைவர்களாக செயற்பட்டு கிராமங்களில் ஏற்படும் அனர்த்தங்களை கையாளும் அதிகாரத்தையுடைய கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரிவு உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு அனர்த்த முகாமைத்துவ மீள்பயிற்சி ஒன்று கல்லடி பிரிட்ஜ் வியூ விடுதி மண்டபத்தில் செவ்வாய்க் கிழமை (23) நடைபெற்றது

ஆரம்ப நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு மாவட்டக் கிளைத் தலைவர் த.வசந்தராஜா, ஏறாவூர்ப்பற்று பிரதேச அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.மதுசூதனன் கிராம மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் இணைப்பாளர் எஸ்.யசோதரன் மற்றும் ஒக்ஸ்பாம் நிறுவன நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் எஸ். ஜனேந்திரன் (ஜனா) முதலானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது முல்லைத்தீவு அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.கோகுலன்  இப்பயிற்சியின் வளதாரியாக கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினார்.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் 19 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும்; ஏறாவூப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுமாக மொத்தம் 24 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளில் அனர்த்த ஆபத்துக் குறைப்பு நிகழ்ச்சித்திட்டம் ஒன்றினை ஒருவருடகாலமாக கிராம மக்கள் அபிவிருத்தி ஒன்றியம், ஒக்ஸபாம், மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு மாவட்டக்கிளை ஆகியன இணைந்து நடைமுறைப்படுத்தி வருகின்றன.

வெள்ள அபாயத்தின் தாக்கத்துக்கு இலகுவில் உட்படக்கூடிய, குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் விஷேட தேவைக்குட்பட்டோர் உள்ளடங்களாக உள்ள மக்களிடையே அத்தாக்கத்துக்கு முகம் கொடுக்கக்கூடிய இயலுமையை வளர்க்குமுகமாக பல்வேறு விதமான பயிற்சிகளையும் அணர்த்தத் தணிப்பு செயற்பாடுகளையும் கிராம மக்கள் அபிவிருத்தி ஒன்றியம், ஒக்ஸபாம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இக்கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தி வருகின்றது. இச்செயற்பாட்டின் ஒரு அங்கமாகவே மேற்படி பயிற்சி இடம்பெற்ற குறிப்பிடத் தக்கதாகும்.  





SHARE

Author: verified_user

0 Comments: