13 Feb 2016

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் குடி நீர் பிரச்சனைக்குத்இ தீர்வு காணும் முகமாக நடமாடும்

SHARE
நகர திட்டமிடல் மற்றும், நீர் வழங்கல், அமைச்சின், அனுசரணையுடன், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுமட் குடி நீர் பிரச்சனைக்குத், தீர்வ காணும் முகமாக நடமாடும் சேவை ஒன்று இடம்பெறவுள்ளது.
நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் தலைமையின் கிழ் மேற்படி சபையின் தலைவர், மற்றும், பணிப்பாளர்களின், பங்கு பற்றுதலுடன், எதிர்வரும் மார்ச் 3 ஆம் திகதி,  காலை 9.30 மணிக்கு, கல்லடி 42 விபுலானந்த வீதியில் அமைந்துள்ள முகாமையாளர் ( பராமரிப்பு, நடாத்துதல்) மட்டக்களப்பு காரியாலயத்தில் நடைபெறவுள்ளது.

எனவே பொதுமக்கள் தங்களுக்கு குடிநீர் பற்றிய பிரச்சனைகள் ஏதும் இருப்பின் எதிர் வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நேரடியாகவே அல்லது தபால் மூலமாகவோ, அல்லது 065 2050600 என்று தொலை நகல் இலக்கத்தினூடாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், மாவட்ட பொறியியலாளர் காரியாயலம் மட்டக்களப்பு, மற்றும் பொறுப்பதிகாரி காரியாலயங்களான மட்டக்களப்பு, இருதயபுரம், கல்லடி, காத்தான்குடி, ஆரையம்பதி, ஏறாவூர், செங்கலடி, வவுணதீவு, கல்லாறு, களுவாஞ்சிகுடி, ஆகிய இடங்கில் அமைந்துள்ள காரியாலயங்களிலும், பொதுமக்கள் தமது முறைப்பாடுகள், வேண்டு கோள்களைப் பதிவு செய்து கொள்ளலாம். 

மேற்படி இடங்களில் பதிவு செய்யப்படும்போது அங்கு வழங்கப்படும், அடையாளப் படிவத்தைப் ( டோக்கன்) பெற்றுக்கொண்டு, எதிர்வரும் மார்ச் 3 ஆம் திகதி,  காலை 9.30 மணிக்கு, கல்லடி 42 விபுலானந்த வீதியில் அமைந்துள்ள முகாமையாளர் (பராமரிப்பு, நடாத்துதல்) மட்டக்களப்பு காரியாலயத்தில் நடைபெறவுள்ள நடமாடும் சேவையில் கலந்து கொண்டு பொதுமக்களின் குடிநீர் பிரச்சனைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொள்ளலாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும், வடிகாலமைப்புச் சபையின், மட்டக்களப்பு முகாமையாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.


SHARE

Author: verified_user

0 Comments: