25 Feb 2016

மட்.களுமுந்தன்வெளி அ.த.க.பாடசாலையின் வருடாந்த உடல் திறனாய்வு - ஊடக அனுசரணை எழுவான் நீயூஸ்

SHARE
மட்.களுமுந்தன்வெளி அரசியர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த உடல் திறனாய்வுப் போட்டி இன்று வியாழக் கிழமை (24) கொட்டும் மழையிலும், களுமுந்தன்வெளி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 392 புள்ளிகளைப் பெற்று கலைமகள் இல்லம், முதலாம் இடத்தையும், 380 புள்ளிகளைப் பெற்று அலைமகள் இல்லம் இரண்டாம் இடத்தையும், 370 புள்ளிகளைப் பெற்று மலைமகள் இல்லம் மூன்றாம் இடத்தையும், பெற்றுக் கொண்டது.

மேற்படி பாடசாலையின் அதிபர் சி.சிவபாதம் தலைமையில் நடைபெற்ற, இந்நிகழ்வில், பட்டிருப்புக் கல்வி வலயக்கல்விப் பணிப்பாளர் பிரதிக்கல்விப் பணிப்பாளர் மா.உலககேஸ்பரம், கோட்டக்கல்விப் பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன், மட்டக்களப்பு கச்சேரியின் உதவித்திட்டப் பணிப்பாளர் ஆ.சுதாகரன், உடற்கல்விப் பணிப்பாளர் என்.நாகராஜா, மேலும், கிராம பெரியோர்கள், பழைய மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாணவர்கள், பெற்றோர்கள், உட்பட உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மட்.களுமுந்தன்வெளி அ.த.க.பாடசாலையின் பிரதி அதிபர் க.சந்திரகுமாரின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இவ்விளையாட்டு நிகழ்விற்கு, எழுவான் இணையத்தளத்தளம், ஊடக அனுசரணை வழங்கியிருந்தது. நடைபெற்ற இவ் உடல் திறனாய்வு நிகழ்வின் ஒளிப்படங்கள், மற்றும், வியோ காட்சிகளை தளத்தில் பார்வையிடலாம்.

இதன்போது மாணவர்களின் 100 மீற்றர், 200 மீற்றர், அஞ்சல் ஓட்டங்கள், பழைய மாணவர்களுக்கான ஓட்டங்கள் என்பன நடைபெற்று உடற்பயிற்சிக் கண்காசியும், சிறப்புற நடைபெற்றிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
















































































SHARE

Author: verified_user

0 Comments: