உதிரம் கொடுத்து உயிர் காப்போம் எனும் கருப் பொருளில் இரத்ததான நிகழ்வொன்று திங்கட் கிழமை (22) மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது. கிழக்கின் இளைஞர் முன்னணி அமைப்பின் தலைவர் க.கோபிநாதின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த இரத்ததான நிகழ்வில் 50 இற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.
கிழக்கின் இளைஞர் முன்னணி அமைப்பினர் தானாக முன்வந்து இச் சேவையினை செய்கின்றனர், இச் சேவை விலைமதிப்பிட முடியாத சேவையாகும், இதனை இத்துடன் நிறுத்தி விடாமல் ஆண்டு தோறும் தொடர்ந்து நடாத்த வேண்டும், இவ்வாறு பல சேவைகளை இவ் அமைப்பினர் செய்ய முன்வர வேண்டும் என இதன் ஆரப்ப நிகழ்வில் கலந்து கொண்டு இரத்த தானத்தை ஆரம்பித்து வைத்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தெரிவித்தார்.
எமது முன்னணியானது கல்வி, கலை, சுகாதாரம், ஆன்மீகம் போன்ற பல துறைகளிலும் சேவைகளை திட்டமிட்டு செய்து வருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் பற்றாக்குறை நிலவுவதனால் அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு இவ் இரத்ததான வைபவத்தினை ஏற்பாடு செய்திருந்தோம். அதனடிப்படையில் எமது முன்னணியின் உறுப்பினர்களும் மிகவும் பங்குபற்றியிருந்தனர். என கிழக்கின் இளைஞர் முன்னணி அமைப்பின் தலைவர் க.கோபிநாத் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment