(க.விஜி)
மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் பாடசாலையின் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி எதிர்வரும் செவ்வாய்கிழமை (09) பிற்பகல் 2.30 மணியவில் அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வின் ஆத்மீக அதிதியாக இராமகிருஸ்னமிஷன் சுவாமி சிறிமத் சுவாமி பிரபு பிறேமானந்தாஜீ மகராஜ் அவர்களும்இபிரதம அதிதி யாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் அவர்களும்இஅழைப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன்இமண்முனைக் கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சுகுமாரன் இஉடற்கல்வி உதவிக்கல்விக்கல்வி பணிப்பாளர் வீ.லவக்குமார் ஆகியோர்களும்இவிஷேட அதிதிகளாக மட்டக்களப்பு மக்கள் வங்கி முகாமையாளர் எஸ்.சரவணபாவான்இ காத்தான்குடி பொலீஸ்நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.வீ.வெலகெதரஇ சட்டத்தரணி செல்வி என்.சிந்துவாஸ்ஷினி மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர்இபெற்றோர்கள்இமாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக விவேகானந்தா மகளிர் பாடசாலையின் பிரதி அதிபர் முருகேசு இன்பராசா தெரிவித்தார்
0 Comments:
Post a Comment