பழுகாமம் மண்ணில் பல மன்னர்கள் வாழ்ந்த சரித்திரங்கள் உள்ளன இங்கு வாழ்ந்த மன்னர்கள்தான் கண்டியை ஆட்சி செய்த இராஜ மன்னனுக்கு குதிரைப்படைகள், யானைப் படைகளை அனுப்பி, உதவி செய்திருக்கின்றார்கள் என்பது வரலாறாகும். அப்படிப்பட்ட வீரம் செறிந்ததுதான் இந்த பழுகாமம் மண்ணாகும்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்.திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி வெள்ளிக் கிழமை (26) மாலை திருப்பழுகாமம் மைதானத்தில் வித்தியாலய அதிபர் எஸ்.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….
கடந்த கால வரலாற்றில் இந்த மாவட்டத்தின் கால்வி நிலையில் உதயர்ந்திருந்த எமது தமிழ் சமூகம் தற்போது கல்வியில், குறைந்த நிலையில் காணப்படுகின்றது. எனவே எமது சமூகத்தின் கல்வியையும், விளையாட்டுக்களையும். உயர்வடையச் செய்ய வேண்டியது எமது ஒவ்வொருவரதும் கடமையாகும்.
இப்பிரதேசத்தில் மிகவும் வறிய நிலையிலிருந்து பல்கலைக் கழகக் கல்வியைத் தொடரும் மாணர்வள் எம்முடன் தொடர்பு கொண்டால் அவர்களது பல்கலைக் கழகக் கல்வியை முடிக்கும் வரையான செலவுகளை நாம் வழங்கவுள்ளோம். இவற்றுக்குரிய ஏற்பாடுகளை நாம் மேற்கொண்டுள்ளோம்.
எமது மாணவர்களின் கல்வியை நாம் உயர்த்தினால்தான் எமது சிறந்த எதிர் காலத்தைக் கட்டியெழுப்பலாம். இந்த பழுகாமம் மண்ணில் பல மன்னர்கள் வாழ்ந்த சரித்திரங்கள் உள்ளன இங்கு வாழந்த மன்னர்கள்தான் கண்டியை அப்போது ஆட்சி செய்த இராஜ மன்னனுக்கு குதிரைப்படைகள், யானைப்படைகளை அனுப்பி, உதவிசெய்திருக்கின்றார்கள் என்பது வரலாறாகும். அப்படிப்படம்ட வீரம் செறிந்ததுதான் இந்த பழுகாமம் மண்ணாகும்.
இப்பட்டிப்பட்ட வீரம் நிறைந்த மண்ணில் பிறந்த மாணவர்கள் அனைவரும் சிறந்த முறையில் முன்னேற வேண்டும்.
இது ஒருபுறமிருக்க யுத்தினால் பாதிக்கப்பட்ட எமது படுவான்கரைப் பகுதி மக்களின் வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்ப அரசாங்கத்தினால் பொரும்தொகையான நிதி வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளன. சுமார்
2000 நபர்களுக்கு, 4 வீத வட்டி வீதத்தில், வாழ்வாதாரக் கடன்களை வழங்கக் கூடிய அளவிற்கு வங்கிகளில் நிதிவசதிகள் ஏற்படுத்தப் படடுள்ளன. ஆனால் இதுவலையில் 700 பேர்தான் இவ்வாறு கடன்களைப் பெற்றுள்ளார்கள். ஏனைய மக்களுக்கு இவை தொடர்பான விழிப்புணர்கள் இல்லை. எனவே புணர்வாழ்வு அதிகாரசபையினால் ஏற்படுத்தப்பட்டுள்ள இக்கடன் வசதியை எமது மக்கள் பெற்று வாழ்வாதார ரீதியாக முன்நேற்றமடையலாம். இவற்றுக்கு நாம் ஏனைய உதவிகளையும், மேற்கொள்ளத் தயாரகவுள்ளோம்.
யுத்ததினால் பாதிக்கப்பட்டு அரைகுறையாகக் காணப்படும் வீடுகளைக் கட்டப்பட்டுள்ள வீடுகளைப் புணரமைப்பதற்கு இலவசமாக சீமந்து பைகள் வழங்கும் திட்டமும் உள்ளது இவற்றையும், பெறுவதற்கு விரும்பும் மக்கள் எம்முடன் தொடர்பு கொண்டால் அவற்றைப் பெற்றுக்கொடுக்க நாம் ஒத்துழைப்புக்களை வழங்குவோம். என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment