22 Feb 2016

களுவாஞ்சிகுடி கிராம மக்கள் எந்தவித அபிவிருத்தி பண்புகளையும் அனுபவிக்கவில்லை - அபிவிருத்திச் சங்கத் தலைவர் கிருபைராஜா

SHARE
வன்செயலுக்குப் பின்னர்   எமது கிராமத்தில்  எந்தவித அபிவிருத்திகளும் இடம் பெறவில்லை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெயர் சொல்வி கதைக்கும் அளவுக்கு காணப்படும் களுவாஞ்சிகுடி கிராமம் பல வழிகளிலும் அடிப்படை வசதியின்றி காணப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்ய நல்லாட்சி அரசாங்கத்தில் சந்தர்ப்பத்தினை பெற்றுத்தருமாறு மாவட்ட அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுப்பதாக களுவாஞ்சிகுடி அபிவிருத்திச் சங்கத் தலைவர் கு.கிருபைராஜா தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடி கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
கடந்த கால யுத்த சூழ் நிலையில் பலவற்றை இழந்திருக்கின்றோம் அவற்றினை இற்றைவரைக்கு மீண்டும் பெற்றுக் கொள்ள முடியாமல் பேயுள்ளது. அதற்கு கடந்த கால அரசியல் சூழ் நிலையும் ஒருகாரணமாக அமைந்தது, இன் நிலை தற்போது மாறியுள்ளது. களுவாஞ்சிகுடியானது தற்போது நகரசபையாக மாறவேண்டிய கட்டத்தில் இருக்கின்றது ஆனால் அதற்கான எந்தவித அபிவிருத்தி  பண்புகளையும் எமது மக்கள் அனுபவிக்கவில்லை மாறாக  இதுவரைக்கும் எமது மக்கள் அடிப்படை வசதியின்றியே வாழ்ந்து வருகின்றனர்.

எமது கிராமத்தில் யுத்த சூழ் நிலைக்கு பின்னர் பலதரப்பட்ட கிரமங்களை சேர்ந்த மக்களும்  வசித்து வருகின்றனர்.  இவ்வாறு ஒன்றிணைத்த கிராமமாக காணப்படும் இக் கிராமத்தில் சனத்தொகையின் விருத்திற்கு ஏற்ப பாடசாலை, வீதி, குடிநீர் வசதி, மின்சாரம், சந்தை, மற்றும் ஏனைய திணைக்களங்கள் ரீதியான அபிவிருத்தி ஏதுவும் நடக்கவில்லை, மட்டக்களப்பு மாவட்டத்தினப் பொறுத்த வரையில் பட்டிருப்பு தொகுதியின் அரசியலில் எமது கிராமம் கூடிய பங்களிப்பை செலுத்தி வந்துள்ளது. நாங்கள் செலுத்தும் பங்களிப்புக்கு எமது கிராமத்திற்கு அரசியலவாதிகள் பங்களிப்பு செலுத்தமால் உள்ளமை கவலையளிக்கின்றது. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் மலர்ந்திருக்கின்ற நல்லாட்சி அரசியல் சூழ் நிலையிலலாவது மாவட்ட அரசியல் வாதிகள் எமது கிராமத்தின் அபிவிருத்திக்கு முன்வந்து செயற்பட வேண்டும் என கேட்டுக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்
SHARE

Author: verified_user

0 Comments: