மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியிலுள்ள பற்றைக்காடு ஒன்றினுள் பெண் ஒருவரின் சடலம், கிடப்பதை அவதானித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் அறியவருவதாவது… குருக்கள்மடம், பிரதான வீதியில் அமைந்துள்ள தேவாலயத்திற்கும், அப்பகுதியில் அமைந்துள்ள விவசாயப் பண்ணைக்கும் இடைப்பட்ட பகுதியில் காணப்படும் பற்றைக்காட்டுப் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக திங்கட் கிழமை இரவு பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
இவ்விடையம் குறித்து ஸ்த்தலத்திற்கு விரைந்த பொலிசார், சுமார் 40 தொடக்கம், 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாகக் கிடப்பதை அவதானித்துள்ளனர். இருப்பினும், இச்சடலம் யாருடையது என அடையாளம், காணப்படவில்லை சடலத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளதாகவும், நாளை செவ்வாய்க் கிழமை (23) நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு சடலம் மீட்கப்படும் என பொலிசார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment