22 Feb 2016

விஸ்வகர்ம பொற்றொழிலாளர் சம்மேளனத்தினால் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

SHARE
ஏறாவூர் 4 ஆம் குறிச்சி கணேசா காளிகா தேவஸ்தான அறநெறிப் பாடசாலை மாணவர்கள் சுமார் 100 பேருக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அன்பளிப்புகள் வழங்கும் நிகழ்வு ஞாயிறன்று (21) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கிலங்கை விஸ்வகர்ம பொற்றொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் எஸ். பாக்கியநாதனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கிலங்கை விஸ்வகர்ம சங்கத்தின் ஸ்தாபக தலைவர் மறைந்த கலாபூசணம் பி.எம். செல்லத்துரை அவர்களுக்கு இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கிழக்கு மாகாண விஸ்வகர்மா பொற்றொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய ஆலோசகருமான எஸ். குருகுலசிங்கம், கணக்காய்வாளர் எஸ். சந்திரா, இலங்கை (கொழும்பு) விஸ்வகர்மா சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் லயன் கணேசமூர்த்தி, சர்வதேச லயன்ஸ் கழகத்தின் மாவட்டம் -306 சீ2 மட்டக்களப்பு கழகத்தின் தலைவர் லயன் கலாநிதி கே. செல்வராஜா ஆகியோரடங்கலாக பெற்றோர் மற்றுமு; மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 






SHARE

Author: verified_user

0 Comments: