மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பிரதேசத்திலுள்ள கடையொன்றில் சமைத்து விற்கப்பட்ட உணவுகள் விஷமானதால் இதுவரை 56 பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை காத்தான்குடியிலுள்ள ஹொட்டேல் ஒன்றில் விற்கப்பட்ட புறியாணி உண்டதிலேயே இந்த உணவு நஞ்சாதல் ஆபத்து ஏற்பட்டது.
சம்பவத்தை கேள்வியுற்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை கேட்டறிந்ததோடு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரை தொடர்பு கொண்டு மேலதிக சிகிச்சைகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கையினை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதன் தொடராக அவசர கலந்துரையாடலொன்று காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது.
0 Comments:
Post a Comment