3 Feb 2016

மணற்சேனை கிராமத்தின் வீதிகள் மக்களிடம் கையளிப்பு.

SHARE
கிழக்கு மாகாணசபையின் பிராந்திய சமப்படுத்தல் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 50 லெட்சம் ரூபா செலவில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட அம்பாறை மாவட்ட பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மணற்சேனை கிராமத்தின் நான்கு வீதிகள் கொங்கிறீற் இடப்பட்டு திங்கட் கிழமை (02) திறந்து மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. மணற்சேனை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் ஜெகதீஸ்வரன் ஏற்பாட்டில் இடம்பெற்ற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கி. துரைராசசிங்கம், மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களான இராஜேஸ்வரன், கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் மற்றும் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மணற்சேனை வேலு வீதி, இன்டர்நெட் வீதி, ஜோசப் வீதி, டிரான்ஸ்போமர் வீதி ஆகிய வீதிகளே இவ்வாறு புனரமைப்பு செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டன.

கடந்த காலங்களில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட பிரதேசமாக இப்பிரதேசம் அமைந்தமையால் சென்றவருட ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளின் நடவடிக்கை மூலம் இப்பிரதேச வீதிகள் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 Comments: