5 Feb 2016

கதிர்காமநாதனின் மறைவுக்கு கிழக்கு இந்து ஒன்றியம் அனுதாபம்.

SHARE
அகில இலங்கை இந்து மாமன்ற பொதுச் செயலாளரும், கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவருமாகிய மறைந்த கலாநிதி முத்தையா கதிர்காமநாதனின் மறைவுக்கு கிழக்கு இந்து ஒன்றியம் சார்பாகவும், இந்து மக்கள் சார்பாகவும், தங்களுடைய ஆழ்ந்த அனுதாபத்தினை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தெரிவித்துள்ளது.
இவரது மறைவு தொடர்பாக வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

அகில இலங்கை இந்து மாமன்ற பொதுச் செயலாளரும், கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவருமாகிய மறைந்த முத்தையா கதிர்காமநாதன் மறைவு எமக்கும், இந்நாட்டில் வாழும் அனைத்து இந்து மக்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சைவமும், தமிழும் தழைத்தோங்க மாமன்றத் தலைவர் கந்தையாக நீலகண்டன் அவர்களுக்கு பக்க பலமாக இருந்து அர்ப்பணிப்புடன் திறம்பட சேவையாற்றிக் கொண்டிருந்த வேளையில் இறைவன் திருவடியில் இன்புற்றிருக்கும் பாக்கியத்தை பெற்றிருப்பதாகவே நாங்கள் கருதுகின்றோம்.

மட்டக்களப்பு மண்ணில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் துணைச் செயலகம் ஒன்றை ஆரம்பித்து செயற்படுவற்காக மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர். மட்டக்களப்பு மக்களின் உன்னத சேவைக்காக நேசக்கரம் நீட்டியவர். அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையோடு மாமன்றத்தின் வைர விழாவை முன்னிட்டு மாமன்றம் இணைந்து சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியில் நடாத்திய நாவலர் விழா, சிவதொண்டர் மா நாட்டின் போது மட்டக்களப்பு மக்கள் சைவத்தின் பால் ஊறியர்கள் என்னும் கருத்தை அடிக்கடி ஞாபகப்படுத்தியவர்.

இப்பெருந்தகையின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகவே நாம் கருதுகின்றோம். அன்னாருடைய ஆத்மா இறை திருவடியில் இன்புற்றிருக்க எமது பேரவையும், மட்டு வாழ் மக்களும் பிராத்திப்பதாகவும் அன்னாரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மாமன்றத்தினருக்கும் ஆறுதலும் ஆழ்ந்த அனுதாபத்தையும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன், பேரவை பொதுச் செயலாளரும், அகில இலங்கை இந்து மாமன்ற உப செயலாளருமான சா.மதிசுதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


SHARE

Author: verified_user

0 Comments: