இலங்கையர் என்ற உணர்வு மேலோங்க வேண்டுமாக இருந்தால் இன்றைய நல்லாட்சியாளர்கள் பிளவு படாத ஐக்கிய இலங்கைக்குள் சமஸ்ட்டி என்ற பதத்தில் அல்ல சமஸ்ட்டி என்ற தரத்திலான அதிகாரப் பகிர்வை முன்வைக்க வேண்டும் என்று விரிவுரையாளர் கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா தெரிவித்தார்.
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் இதயசுத்தியுடன் உண்மையான சுதந்திரத்தை கட்டியெழுப்புவோம் என்ற தொனிப் பொருளிலில் வியாழக்கிழமை (04) தினம் நடைபெற்ற 68 வது சுதந்திரதின வைபவத்தில் சிறப்புரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா,
சாதி பேதம், இனப்பேதம், மதப்பேதம், பிரதேச பேதமற்ற ஒன்றுபட்ட இலங்கையர் என்ற உணர்வுள்ள தேசத்தை நாம் வெறும் வார்த்தைகளால் கட்டியெழுப்ப முடியாது. அதை நாம் அடையப்பெறுவதாக இருந்தால் நாம் எல்லோரும் இந்த நாட்டின் மக்கள் என்ற வகையில் இதய சுத்தியுடன் நியாயமான உணர்வு மிக்க விட்டுக்கொடுப்புகளை பரஸ்பர புரிந்துணர்வுடன் விட்டுக்கொடுக்க வேண்டும்.
எம்மை நாம் தமிழன் என்று சொல்வதாலோ முஸ்லிம் என்று சொல்வதாலோ சிங்களவன் என்று சொல்வதாலோ நாம் அடைகின்ற உணர்வு பூர்வமான மகிழ்ச்சிpயை ; விட நாம் இலங்கையன் என்று சொல்வதால் மிகுந்த பெருமிதம் அடைகின்றோம். நாம் எத்தேசத்திற்குச் சென்றாலும் எம்மை இலங்கையன் என்றே அழைக்கின்றனர் மாறாக எங்கள் இனங்களின் பெயரால் எவரும் உடனடியாக அழைப்பதில்லை.
நாம் இன்று முக்கியமானதொரு காலகட்டத்திலே, முக்கியமானதொரு இடத்திலே முக்கியமானதொரு நிகழ்வில் ஒன்றுகூடியிருக்கின்றோம். அன்னிய காலணித்துல ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற தேசத்தின் 68 வது தேசிய விடுதலை தின நிகழ்வினை இன்று நினைவு கூர்ந்து கெண்டாடிக் கொண்டிருக்கின்றோம் இந்த வைபவம் உண்மையில் இதயசுத்தியுடன் கொண்டாடப்படுகின்றதா? என்ற கேள்வி எம் மக்கள் மத்தியில் உள்ளது. உண்மையில் சுதந்திரம் என்பது வெறும் எழுத்திலும், வாய் வார்த்தைகளிலும் இருப்பதை விட நடைமுறைச் சாத்தியப்பாட்டுடன் எவ்வளவு தூரம் உள்ளது என்ற கேள்வி ஆதங்கள், சிறுபான்மைச் சமூகத்திடம் நிறையவே உள்ளது.
இன்றைக்கு 68ஆண்டுகளாக தமிழ் பேசும் மக்கள் தன்னைத்தொனே நிருவகிக்கக்கூடிய அதிகாரங்களைக் கேட்டு அகிம்சை ரீதியிலும், கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஆயுதம் ஏந்தியும் போராடி சர்வதேசத்தினால் கண்காணிக்கப்படும் அளவிற்கு கைமீறிப் போய்விட்டது.
உண்மையிலே இந்நாட்டில் இனபேதம், மதபேதம், இல்லாது இருந்திருந்தால் இந்நாடு இத்தகையதொரு இழிநிலைக்குச் சென்றிருக்காது. எமது தாய் நாட்டின் மானத்தை தேசப்பற்றாளர் என்ற பொர்வையில் எமது குறுகிய இனவாத அரசியல் நடவடிக்கைகளுக்காக, அற்ப சுயநலத்துக்காக சர்வNதுச ரீதியில் அவமானப்படுத்த துணிந்திருக்க மாட்டார்கள். தாய் நாட்டை நேசிக்கின்ற இலங்கையர் ஒவ்வொருவரும் இந் றாட்டை இதய சுத்தியுடன் உண்மையான சுதந்திரத்தை பல்லின சமூகம் வாழும் நாட்டில் கட்டியெழுப்பவே உழைத்திருப்பர் அதற்காகவே அர்ப்பணித்திருப்பர்.
காலச் சக்கரவோட்டத்தில் மகத்தான தலைவர்களைத் தந்த இந்தநாட்டின் தலைவிதி தீர்மானிக்கப்பட்ட முடியாத ஒன்றாக மாறியதற்கு யார் காரணம். பிரித்தானிய காலனித்துவ ஆதிக்கத்தின் பின் கிடைத்த சுதந்திரம் இந் நாட்டின் பெரும்பான்மை சமூகம் தவிர்ந்த ஏனையவர்க்குப் பெயரளவாகவே இருந்தது. கல்வியிலும, அபிவிருத்தியிலும், தொழில்வாய்ப்பிலும் ஏனையவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். அவர்களுடைய பாரம்பரியப்பிரதேசம் திட்டமிட்ட குடியேற்றத்திற்கு உள்ளானது. இதனால் அவர்களது வாழ்வாதாரங்கள் கபளீகரம் செய்யப்பட்டன. இத்தகைய மாற்றுத்தீர்வை நாடி நின்றது இனவாதமும், இனத்துவேசமும் இலாபமீட்டும் அரசியல் சந்தைக்கு மூலதனமாகியது.
காலத்திற்குக் காலம் இனக்கலவரங்களாலும் அரசியல் வன்முறைகளாலும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் தமது தலைவிதியைத் தீர்மானிக்கத் தமது இனத்தைப் பாதுகாப்ப தாமே போராட வெணள்டும் என்ற சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டது. சத்தியாக்கிரகப் பொராட்டம், ஹர்த்தால், ஸ்ரீ ஒழிப்புப் போராட்டம் எனப் பல போராட்டங்கள் வேகமாக வளர்ச்சி கண்டன. டட்லி- செல்வா ஒப்பந்தம், பண்டா - செல்வா ஒப்பந்தம், ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம், திம்புப் பேச்சுவார்த்தை, இந்திய இலங்கை ஒப்பந்தம், சந்திரிகா விடுதலைப்புலிகள் ஒப்பந்தம், ரணில் பிரபா நோர்வே அனுசரணையுடனான ஒப்பந்தம், 2009.05.17 உடன் ஆயுதப் போராட்டம் மொனிப்பு, அதன் பின் சர்வதேச ரீதியாக ஏற்பட்ட நெருக்கடி நிலைமைகள் காரணமாக ஜெனிவாத் தீர்மானம் வரை காலத்திற்குக்காலம் தமிழ் பேசும் இனம் ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டு வந்துள்ளது. ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டுள்ளன. நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. 32க்கு மேற்பட்ட பெரும்பான்மை இனவாத அமைப்புக்கள் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வு முன்னெடுக்கப்படும் போதெல்லாம் தோற்றம் பெற்று தீர:வு நடடிவக்கைகளை செயலிழக்கச் செய்துள்ளன.
ஆயினும், தமிழ் பேசும் இனத்திற்கு ஓர் நியாயமான தீர்வு வேண்டும் என்று தமிழ் மக்கள் சார்பாக இலங்கைத் தீவில் குரல் கொடுத்த பெரும்பான்மை இனத் தலைவர்கள் கூட இனவாதத்துக்குள் மாண்டுபோயினர். இந்த வகையில் தமிழர் தீர்வைக் கேட்கும் முன்பே எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்க இந் நாட்டு மக்களுக்கு சமஸ்ட்டி முறையில் 1926இல் தீர்வுக்காண முற்பட்ட தலைவர். இவர் 1956இல் தனிச் சிங்களச் சட்டத்தை உருவாக்கி அமுல்ப்படுத்தி இன முரண்;பாட்டிற்கு தீவிர வடிவம் கொடுத்தவர். இவர் 1956ல் இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் உரையாற்றும்போது இலங்கைக்கு சமஸ்டி அரசியலமைப்பே பொருத்தமானதென்று முதன் முதலாக சமஸ்ட்டி குரலை ஒலித்தார். அதனைத் தொடர்ந்து கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா இரு மொழி ஒருநாடு என்ற கோசத்தை முன்வைத்தார். சேர் ஜோன் கொத்தலாவல கூட தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம அந்தஸ்த்து வழங்க வேண்டும் என 1953இல் நடைபெற்ற ஹர்த்தாலைத் தொடர்ந்து 1954ல் குறிப்பிட்டு இருந்தார்.
இவ்வாறு சிங்களத் தலைவர்கள் தமிழர் பிரச்சினையை நன்கு அறிந்திருந்த சூழலில் தான் 16.08.1956ல் திருமலை யாத்திரை முடிவில் நடைபெற்ற மகாநாட்டில் தந்தை செல்வா சமஸ்டித் தீர்வை முன்வைத்தார்.இவையெல்லாம் நிராகரிக்கப்பட்ட சூழலிலேயேதான் தனிநாட்டுக் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் 1976.05.14ம் திகதி நிறைவேற்றப்பட்டது.
காலத்திற்குக் காலம் சீர்திருத்தம் 1972 அரசியலமைப்பு சீர்திருத்தம், 1978சீர்திருத்தம் எனப் பல்வேறு அரசியல் சீர் திருத்தங்கள் வந்த போதும் தமிழர் பிரச்சினைக்கு நிலையான தீர:வுத்திட்டங்களை ஆட்சியில் இருந்தவர்கள் முன்வைக்கவும் இல்லை. கருத்தில் கொள்ளவும் இல்லை.
இனவாதமும்; மதவாதமும், இலங்கைப் பெரும்பான்மை சமூகத்தையும் சிறுபான்மைச் சமூகத்தையும் மேலும் பிளவு படுத்தின. காலத்திற்குக் காலம் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன. கைவிடப்பட்டன. இத்தகைய சூழலில் இதய சுத்தியுடனான உண்மைச் சுதந்திரத்தை நாம் அனுபவிக்க பரஸ்பர விட்டுக் கொடுப்புக்கள் அவசியம். இலங்கைச் சிறுபான்மையினச் சமூகங்கள் நியாயமான முறையில் பல விட்டுக் கொடுப்புக்களைச் செய்துள்ளன. பல பாதிப்புக்களைச் சந்தித்துள்ளன. எனவே இந் நாட்டில் நல்லாட்சியும்இன, மத ஒற்றுமைப்பாடும் சகோதரத்துவமும் கட்டமைக்கப்பட வேண்டுமானால் இலங்கைத் தீவின் இதயத் துடிப்பாக இலங்கை மக்கள் ஒவ்வொருவரினதும் இதயத்துடிப்பு அமைய வேண்டுமானால் நாம் எல்லோரும் இலங்கையர் என்ற உணர்வு மேலோங்க வேண்டுமாக இருந்தால் இன்றைய நல்லாட்சியாளர்கள் பிளவு படாத ஐக்கிய இலங்கைக்குள் சமஸ்ட்டி என்ற பதத்தில் அல்ல சமஸ்ட்டி என்ற தரத்திலான அதிகாரப் பகிர்வை முன்வைக்க வேண்டும்.
இலங்கைச் சிறுபான்மைச் சமூகத்தினரும் தமது பாரம்பரிய பிரதேசங்களில் தம்மைத்தாமே நிர்வகிக்கின்ற அதிகாரத்தை வழங்க வேண்டும். பாதுகாப்பு, காணி, பொருளாதாரம், விவசாயம், மீன்பிடி, வனவளம், கல்வி, உயர்கல்வி, விளையாட்டு, கலை பண்பாடு, வரையறுக்கப்பட்ட வரிக் கொள்கைகள், பொருளாதார அபிவிருத்தி தொடர்பான வரையறுக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கைகளுக்கான அதிகாரப்பகிர்வுகள், நியதிச்சட்டங்களை இயற்றுவதற்கான மாநில அளவிலான அதிகாரங்களையும் வழங்க வேண்டும்.
மாநில அளவில் பெரும்பான்மை சமூகமாக வாழுகின்றவர்களுக்கிடையில் உள்ள சிறுபான்மைச் சமூகத்தவர் எவ்வினத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் அவர்களுக்கான ஆட்சி உப அலகுகக் வழங்கப்படவேண்டும். ஆளுனர் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.
அவ்வாறு வவழங்கப்படம் பட்சத்திலேதான் இந் நாட்டின் உண்மைச் சுதந்திரம் இதயபூர்வமாக அனுஸ்டிக்கப்படும். இது எமது நாடு, இது பல்லின சமூகத்தவர்களையும், பல்வேறு மதங்களையும் பின்பற்றும் நாடு.எமது நாட்டை சகோதரத்துவத்துடனும், சமாதானத்துடன் நாம் எல்லோரும் இலங்கையர் என்ற இதயசுத்தியுடன் எதிர்கால சபீட்சம் நிறைந்த நல்லாட்சிமிக்க முன்மாதிரியான தேசத்தைக் கட்டியெழுப்புவோம். அதற்காகப்பாடுபடுவோம்.
அரசினர் ஆசிரியர் கலாசாலையின் பிரதி அதிபர் பி.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அதிபர் ஏ.எஸ்.யோகராசா முதன்மை அதிதியாகக் கலந்து கொண்டார். அத்துடன், விரிவுரையாளர்கள், ஆசிரிய மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments:
Post a Comment