8 Feb 2016

வட கிழக்கில் பல தமிழ் அமைப்புக்கள் தோற்றம் பெற்று தங்களுக்குள்ளே தலைமையினைப் பொறுப் பேற்றுள்ளார்கள் - வெள்ளிமலை

SHARE
(இ.சுதா)

வட கிழக்கில் பல தமிழ் அமைப்புக்கள் தோற்றம் பெற்று தங்களுக்குள்ளே தலைமையினைப் பொறுப் பேற்றுக் கொண்டாலும் தமிழர்களை பல வருட காலமாக எதிரிகளின் பாசறைக்குள் இருந்து பாதுகாப்பதற்காக உயிரினை தியாகம் செய்த வீரத் தலைவர்களை வழி நடத்திய மாமேதை வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தவிர வேறு எவரும் தமிழ் மக்களின் தலைவராக வர முடியாது. என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞா.கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம், பெரிய கல்லாறு கடல் நாச்சி அம்மன் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அன்னதான மண்டபத் திறப்பு விழா நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (07) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்ககும் போதே அவரி இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் முலும் தெரிவிக்கையில்…

வீரத் தலைவர்களை வழி நடத்திய மாமேதை வேலுப்பிள்ளை பிரபாகரனைத் மறப்பதற்கு தமிழ் மக்கள் தயாரில்லை வீரர்களின் தலைமைத்துவம் முடிவு பெறாத தொடர் கதையாகும்.

தமிழர் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களில் பலர் வாக்கு வேட்டைக்கு வரம்பு கட்டுகின்றனர். இதனைத் தகுத்தெறிந்து செல்லும் வல்லமை தமிழ் மக்களிடம் உள்ளது. இதனோடு இணைந்த வகையில் தமிழர் கலாசார விழுமியங்கள் ஆலயங்களினூடக வளர்க்கப்படுவது பாராட்டுக்குரிய விடயமாகும்.

அன்னதானம் வழங்குவது இந்துக்களின் கலாசாரம், பசித் தோருக்கு உணவளிப்பதற்கு கோடி தவம் இருக்க வேண்டும். இவ்வாலயம் வேண்டு வோருக்கு வரங்களை வாரி வழங்குகின்ற கடல் நாச்சியம்மன் வீற்றிருக்கும் புண்ணிய தலமாகும். இவ்வாறான ஆலயத்தில் பிரமாண்டமான அன்னதான மடம் அமையப் பெற்றுள்ளமை மகிழ்ச்சி தரக் கூடிய விடயமாகும். எனக் குறிப்பிட்டார்


இந்நிகழ்வில் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு காயத்திரி பீட குரு சாம்பசிவக் குருக்களும்இ  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை பிரதம அதிதியாகவும். அதி விசேட அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் மற்றும் சிறப்பு அதிதியாக சட்டத்தரணி என்.சிவரஞ்சித் உட்பட பாடசாலைகளின் அதிபர்கள்இ ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள்இ பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள்இ பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அண்மையில் வெளியான கல்வி பொதுத்தர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அன்னதான நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




SHARE

Author: verified_user

0 Comments: