3 Feb 2016

அரசியல் ரீதியாகவும் எமது மக்கள் தெழிவடைய வேண்டிய காலம் உள்ளது- பிரசன்னா

SHARE
தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் என்போன்ற இடைப்பட்ட சமூகத்தினர் கல்வியை இடைநடுவே கைவிட்டுள்ளோம். இருந்த போதிலும் எமது எதிர்கால சந்தத்தியினரின் கல்வி வளர்ச்சி என்பது மோசமடைந்து போய்க் கொண்டிருக்கின்றன. இந்நாட்டிலே மிகவும் கலாசார சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றன. கிழக்கு மாகாணத்தில் இடைவிலகல் மாணவர்களின்
தொகை அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவிக்கின்றார். எனவே இந்நிலைமையினை வைத்துக் கொண்டு பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மிகவும் கணணும் கருத்துமாக இருந்து பிள்ளைகளைக் கற்றலில் ஈடுபடுத்த வேண்டும்.

என கிழக்கு மகாண சபையின் பிரத்தித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பு ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும், ஆங்கில வகுப்பறை திறந்து வைக்கும் நிகழ்வும் செவ்வாய்க் கிழமை (02)  வித்தியாலயத்தில் இடம்பெற்றது. 

வித்தியாலயாலய அதிபர் பொ.நேசதுரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…..

எமது தலைமைத்துவங்கள், குறைவடைந்து போகின்றன. தமிழ் அதிகாரிகளின் எண்ணிக்கையிலும் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. 

தேர்தல் காலங்களில் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள், எமது மக்களின் காலடிக்கு தேடிவந்து எமது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று பதவிகளுக்கு வருகின்றார்கள். எனவே அரசியல் ரீதியாகவும் எமது மக்கள் தெழிவடைய வேண்டிய காலம் உள்ளது. 

இந்நிலையில் எமது மண்ணுக்கான உயிரை நீத்த வீரர்களின் தியாகங்களை நாங்கள் என்றும் மறக்க முடியாதவையாகும். இந்த நாட்டிலே எவ்வாறான அரசியல் தீர்வு வேண்டும் என்பதை இந்த நாட்டு அரசாங்கம் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு கருத்துக்கணிப்பை தற்போது எடுத்துக் கொண்டிருக்கின்றது.  விரைவில் இவ்வாறான கருத்துக் கணிப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலும் இடம்பெறவுள்ளது. இதன்போது எமக்கு நிரந்தர அரசியல் தீர்வு வரவேண்டும், வடகிழக்கு இணைந்த சுயாட்சி ஏற்படுத்தப்பட வேண்டும்,  என எமது மக்கள் துணிந்து சென்று தமது கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அடி மட்டத்திலிருந்து உயர் பதவிகள் வரைக்கும் கருத்துக்களைக் கேட்டறிந்து எமக்குரிய நியாயமான தீர்வைத்தான் முன்வைத்து வருகின்றோம். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 ஆசனங்களைப் பெறவேண்டிய எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களில் ஒருசிலர் அற்ப சொற்ப சலுகைகளைப் பெற்று ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களித்திருந்தமையினால் நாம் 3 நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத்தான் பெறவேண்டிய நிலமை ஏற்பட்டிருந்தது. எனத் தெரிவித்த அவர் தொடர்ந்து அனைத்து தமிழ் மக்களும் தமிழ் தேசியத்தின்பால் அணிதிரண்டு வடக்கு கிழக்கு இணைந்த சுய நிருணய ஆட்சியைப் பெற்றெடுக்க ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

SHARE

Author: verified_user

0 Comments: