தமிழ் மக்களுக்கு, ஏற்றுக் கொள்ளக் கூடிய நல்ல தீர்வொன்று வருகின்ற பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமை விட நிற்சயமாக எங்களுடைய கட்சி ஒரு படி மேலாக சென்று அதற்கு ஆதரவு வழங்கும் என கைத்தொழில், வாணிபத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கரசின் தலைவருமான ரிசாட் பதுதீன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இன்று ஞாயிற்றுக் கிழமை (28) நடைபெற்ற சதொச திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொர்ந்து கருத்து தெரிவிக்கையில்…
இந்த மாவட்டத்தில் அரசியல் வாதிகள் தேர்தல் காலங்களில் தங்களின் நலனுக்காக இனவாதங்களை உண்டு பண்ணி அரசியலில் லாபம் ஈட்டுகின்றனர். கடந்த நாடாளுமற் தேர்தலில் ஆளுங்கட்சியில் இப்பகுதி மக்கள், ஒருவரை தெரிவு செய்திருந்தால் இன்று அவர் ஒரு அந்தஸ்துள்ள அமைச்சராக இந்த அரசாங்கத்தில் இருந்திருப்பார். அதுமாத்திரமின்றி உங்கள் சமூகத்தில் இருங்கின்ற துன்ப துயரங்கள், இன்னல், இடைஞ்சலகள்;, யுத்த வடுக்கள் அனைத்தையும் போக்கக் கூடிய திட்டத்தினை இந்த தேசிய அரசு ஊடாக மேற்கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும். நீங்கள் வளர்ந்து வருகின்ற சமூகத்தின் கல்வி, சுகாதாரம், தொழில் வாய்ப்பு, பொருளாதாரம் போன்ற அனைத்துத் துறையிலும் மேற்கொண்ட துரோகமாகத்தான் நான் பார்க்கின்றேன்.
எங்களுடைய கட்சியிலே சிங்கள மாகாண சபை உறுப்பினர் இருக்கின்றார் வாவுனியாவிலே இவரை மூவின மக்களும் சேர்ந்துதான் தெரிவு செய்தார்கள். இதனால் நான் நாடாளுமன்றத் தேர்தலின் நின்ற பொழுது நல்லதொரு ஒற்றுமையை நாங்கள் கண்டோம். ஏன் நான் இதனைச் சொல்லுகின்றேன் என்றால் எங்களிடம் இனவாதம் கிடையாது. இதனால்தான் அகதி முகாமில் வாழ்ந்து கொண்டிருந்த ஒருவரை கட்சிதலைராக, அமைச்சராக அனைந்து இன மக்களும் சேர்ந்து அவர்களுக்கு சேவையாற்றுவதற்காக தேர்ந்தெடுத்துள்ளனர்.
இங்குள்ள மக்களின் தேவைகள் என்ன என்பதனை முன்வைத்திருக்கின்றார்கள், அவை அனைத்தையும் நிவர்த்தி செய்யக் கூடிய ஒரு சந்தர்பத்தினை இந்த மக்கள் நிம்மதியாக, பொருளாதாரத்துடன் சகல வளங்களுடனும் வாழக்கூடாது என்பதற்காக இனவாதம் போசி இந்த மாவட்ட அரசியல்வாதிகள் ஒருவரை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தோற்க்கடித்துவிட்டனர்.
இவ்வாறான பிழையை தமிழ் மக்கள் மீண்டும் விடக்கூடாது. தமிழ் மக்கள் முப்பது வருடங்கள் ஏமாந்தது போதும் இன்னும் நீங்கள் அடிமை வாழ்க்கை வாழக்கூடாது, அப்பாவி இளைஞர்களை பலி கொடுத்ததும், காணமல்போயும் உள்ளார்கள் இது போதும் இன்றும் அதன் காரணமாகத்தான் நாங்கள் வெளிநாட்டு தூதுவர்களை சந்தி சந்தியாக மறித்து பிள்ளைகளை கேட்டு அளவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
நாங்கள் போராட்டத்திற்கோ, அல்லது நிலையான தீர்வுக் கோரிக்கைக்கு எதிரானவர்கள் அல்ல அனியாயம் பேசுபவர்களுமல்ல தமிழ் அரசியல் தலைவர்களும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் முன்னொருகாலத்தில் பிரிந்திருக்கவில்லை முஸ்லிம் அரசியல் தலைவர்களை தமிழ் அரசியல் தலைவர்கள் இணைத்து கொண்டு அரசியல் செய்தார்கள் ஒரு காலகட்டத்தில் பிரிந்தபொழுது இந்த நாட்டில் பல பாகங்கிளிலும் செறிந்துவாழ்கின்ற முஸ்லிம் மக்களின் நலன்கருதி மறைந்த அஸ்ரப் தனியான கட்சி ஒன்றினை ஆரம்பித்து இருந்தார். முப்பதுவருட வரலாற்றில் எதனை பெற்றிருக்கின்றோம் என்று கேட்டால் இழந்தவைகள்தான் அதிகம்.
நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல இந்த நாட்டிலே தீர்வு ஒன்று வழங்கப்படுகின்ற பொழுது அது ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான நீதியான தீர்வாக இருப்பின் நாங்கள் அதனை கேட்பதற்கு பெற்றுக் கொள்வதற்கு அதற்காக போராடுவதற்கு எங்கள் கட்சி தயாராக இருக்கின்றது. ஆனால் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் பிழவுகளை ஏற்படுத்தி இந்த நாட்டிலே இரத்த ஆறு ஒடுவதனை தாங்குகின்ற சக்தி இந்த நாட்டிலே எந்தெவொரு இனத்திற்கும் கிடையாது.
இழக்க வேண்டிய எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். கடந்த அரசாங்கம் இனவாதிகளை கட்டுப் படுத்துவதற்குத்தான் அவர்கள் சட்டத்தினை கையில் எடுத்திருந்தார்கள், அளுத்கமையில் ஏற்பட்ட இழப்புக் காரணமாகவும், அதனை மேற்கொண்டவர்களுக்கு அரசு சட்ட நடவடிக்கை எடுக்காமல் மாறாக அபயம் அளித்ததன் காரணமாகதான் நாங்கள் அந்த அரசை விட்டு வெளியெறினோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருக்கலாம் தேசிய நல்லாட்சியாக இருக்கலாம் தமிழ் மக்களுக்கு நல்ல தீர்வினைக் கொண்டு வருகின்ற பொழுது நிற்சயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பைவிட எங்களுடைய கட்சி ஒரு படி மேலாக சென்று அதற்கு ஆதரவு வழங்கும், அவை சம்பந்தமாக பேசுவதற்கு, அவற்றைப்பெற முயற்சிகளை மேற்கொள்வதற்கு தயாராக இருகின்றோம் என்பதனை நான் கூறிவைக்க விரும்புகின்றேன். என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment