3 Feb 2016

மட்.மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தரவகுப்பு ஆரம்பித்து வைப்பு.

SHARE
மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பு ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும், ஆங்கில வகுப்பறை திறந்து வைக்கும் நிகழ்வும் இன்று (02) செவ்வாய்க் கிழமை வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
வித்தியாலயாலய அதிபர் பொ.நேசதுரை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்விப் பொதுத் தராதர வகுப்பறையை வைபரீதியாக கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன் ஆகியோர் திறந்து ஆரம்பித்து வைத்தனர்.

மேலும் வேள்ட்விஸன் லங்கா பட்டிப்பளைப் பிராந்திய அபிவிருத்தித் திட்டத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆங்கில வகுப்பைறையை பிரதிக் கல்விப் பணிப்பாளர், வேள்ட்விஸன் திட்ட முகாமையாளர் இ.மைக்கல் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதுவரையில் கல்விப் பொதுத்தராதரப் பிரிவு இல்லாமல் இயங்கி வந்த இப்பாடசாலையில் முதன் முதலாக தற்போது ஆரம்பிக்கப் பட்டுள்ள கல்விப் பொதுத் தராதர கலைப் பிரிவில் கற்பதற்கு முதலில் 52 மாணவர்கள் இணைந்துள்ளனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், வேள்ட்விஸன் நிறுவன திட்ட முகாமையாளர் இ.மைக்கல், திட்ட இணைப்பாளர் ஆர்.அமுதராஜ், ஆசிரிய ஆலோசகர் எஸ்.குகாநிதி, கிராமசேவை உத்தியோகத்தர், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது இப்பாடசாலையில் கல்வி கற்று 2015ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 6 மாணவர்களுக்கு குணா மல்ரிசொப் உரிமையாளாரின் உதவியுடன் தலா ரூபா 5000 வீதம் வங்கிக் கணக்கில் இட்டு வங்கிக்கணக்கு புத்தகமும் மாணவர்களுக்கு, வழங்கி வைக்கப்பட்டது.  












































 

SHARE

Author: verified_user

0 Comments: