களுவாஞ்சிகுடியில் கைத் தொழில் வாணிபத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள சதொச விற்பனை நிலையம் அடுத்தவாரம் திறந்து வைக்கப்படும் என மேற்படி அமைச்சின் நிபுணத்துவ அலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின், பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருமாகிய சோ.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
கனேசமூர்த்தியின் வேண்டுதலுக்கு அமைய அமைக்கப்பட்டு களுவாஞ்சிகுடியில் ஞாயிற்றுக் கிழமை மாலை (21) திறந்து வைக்கப்படவிருந்த சதொச கட்டடி திறப்பு விழா பிற்போடப்பட்டமை தொடர்பாக வினாவியபோதே திங்டக் கிழமை (22) தொடர்பு கொண்டு கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.
வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான முக்கிய கலந்துரையாடல் ஒன்று அமைச்சில் உள்ளது. அதனால் குறித்த விடையத்திற்குப் பொறுப்பான அமைச்சர் உட்பட அனைவரும் அக்கலந்துரையாடலில் பங்கேடுக்க வேண்டியுள்ளதால் ஞாயிற்றுக் கிழமை (21) திறந்து வைக்க முடியாமல் போயுள்ளது எனவும், பட்டிருப்பு தொகுதி மக்களின் நன்மைகருதி அமைக்கப்பட்டிருக்கும் குறித்த சதொச விற்பனை நிலையம் எதிர்வரும் வாரத்திற்குள் கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சர் றிசாட் பதூர்தீன் மற்றும் பிரதியமைச்சர் அமீரலி ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நிற்சயமாக திறந்துவைக்கப்படும் என அவர் மேலும் போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment