தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு நுளம்பு பரவும் இடங்கள் குறித்து சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவ்வகையில் டெங்கு பெருக்கம் அதிகமாகவுள்ள மாவட்டங்களில் நான்காவது இடத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் டெங்கு நுளம்புகள் அதிகமாக உள்ள பகுதியாக இனம் காணப்பட்ட மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் டெங்கு ஒழிப்பு பணிகள் நேற்று(18) மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. தவராஜா தலைமையில் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள், மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் மற்றும் நாவற்குடா பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்ததாக முன்னெடுக்கப்பட்டது.
மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது டெங்கு குடம்பிகள் உள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்ட காணி உரிமையாளர்களுக்கும் அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டதுடன், எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய பொது சுகாதார மேற்பார்வை பரிசோதகர் கே. ஜெயரஞ்சன் தெரிவித்தார்.
அத்துடன் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. தவராஜா, உதவி பிரதேச செயலாளர் எஸ். யோகராஜா, மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ். ரங்கநாதன், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எ .பி . வெலகெதர கிராம சேவை உத்தியோகத்தர் எஸ் .பாக்கியநேசன் உட்பட பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

0 Comments:
Post a Comment