26 Feb 2016

ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக கல்வியும், விளையாட்டும் காணப்படுகின்றன - உலககேஸ்பரம்

SHARE
ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக கல்வியும், விளையாட்டும் காணப்படுகின்றன. ஆரோக்கியத்திற்காகவும் போணப்படும் இவ்விளையாட்டுக்கள் தற்காலத்தில் மிகவும் பெறுமதி வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில் விளையாட்டுப் போட்டிகள் இணைப்பாட செயற்பாடுகளாக முன்நெடுக்கப்பட்டுவருகின்றன. என பட்டிருப்புக் கல்வி வலயக் கல்விப் பணிமனையின், பிரதிக் கல்விப்
பணிப்பாளர் மா.உலககேஸ்பரம் தெரிவித்துள்ளார்.

மட்.களுமுந்தன்வெளி அரசியர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த உடல் திறனாய்வுப் போட்டி வியாழக் கிழமை (25) களுமுந்தன்வெளி பொது விளையாட்டு மைதானத்தில் பாடசாலை அதிபர் சி.சிவபாதம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் அவர் மேலும் குறிப்பிடுகையில்…


பட்டிருப்புக் கல்வி வலயம் கிழக்கு மாகாணத்தில் விளையாட்டுப் போட்டியில் கடந்த வருடம், முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதற்குரிய பங்காளிகளான மாணவர்களை நாம், வாழ்த்துகின்றோம்.  அதபோல் தேசிய மட்ட விளையாட்டுக்களிலும், பட்டிருப்புக் கல்வி வலயத்திலிருந்து அதிகளவான மாணவர்கள் பங்கு கொண்டு வருகின்றார்கள். 

எனவே கிராமப் புறங்களிலுள்ள மாணவர்கள் பாடசாலை மட்ட விளையாட்டுக்களுடன் மாத்திரம் நின்றுவிடாமல் தேசியமட்டம் வரைச் சென்று திறமைகளை வெளிக்கொணர வேண்டும்.  

தொடர்ந்து பின்தங்கிய பிரதேசம், பின்தங்கிய பிரதேம் என்று கூறிக் கொண்டிருக்காமல், தொடர்சியான முன்நோக்கிய சிந்தனைகளினூடாக் செயற்பட வேண்டும். இவற்றுக்கு கல்வித் திணைக்களம் சார்பாக நாமும் இப்பிரதேச மாணவர்கள் மீது அதிகளவு அக்கiயுடன் செயற்பட்டு வருகின்றோம்.  

மாணவர்கள் நிகழ்காலத்தில் ஏற்பட்டிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தை நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டால் எதர்காலம் தானாகவே நல்லதாக அமைந்துவிடும். என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: