24 Feb 2016

தாய்மொழி என்பது இதயம் மற்றும் மனதின் மொழியாவதுடன் எமது வாழ்க்கையில் மிகப் பெறும் என்பதில் எவ்வித விவாதத்திற்கும் இடமில்லை - அமைச்சா் மனோ கனேசன்

SHARE

 (அஷ்ரப் ஏ சமத்)

தாய்மொழி என்பது இதயம் மற்றும் மனதின்  மொழியாவதுடன் எமது வாழ்க்கையில் மிகப் பெறும்  என்பதில் எவ்வித விவாதத்திற்கும் இடமில்லை. உண்மையிலேயே  சந்தேஷம். பயம்,கவலை, வலி, அன்பு மற்றும் கோபம் எனும் வெளிப்பாடுகளையும் எமது உணா்வுகளையும்  வெளிப்படுத்துவதற்கு மொழியினைத் தவிர வேறெதுவும் இல்லை.  அறிவை பெறுவதற்கும் அறிவுசாா் மற்றும் வெளிப்பாட்டு விருத்திக்கான  கருவி என்பவற்றிக்கும்  சிறந்த ஊடகமாக  திகழும் தாய்மொழியில் எதுவித முயற்சியுமின்றி எமது கருத்துக்களை நாம் வெளிப்படுத்துகின்றோம்.என அமைச்சா் மனோ கனேசன் தெரிவித்தாா்.

உலக தாய்மொழி தினம் இன்று பெப்ரவரி 21 ஆம் திகதி ராஜகிரியவில் உள்ள அரச கரும மொழிகள் திணைக்களத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வினை மொழிகள் திணைக்களமும் பங்களாதேஸ் நாட்டின் இலங்கை துாதுவா் ஆலயம் இணைந்து செயற்படுத்தியது.  இந் நிகழ்வில்  மொசம்பியா, பங்களாதேஸ் இலங்கை நாடுகளின்  கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. பிரதம அதிதியாக  தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் அரசகரும மொழிகள் அமைச்சாப் மனோ கனேசன் கலந்து கொண்டாா். கௌரவ அதிதியாக பங்களாதேஸ் நாட்டின் உயா் ஸ்தாணிகா்  தாரிக் அஹ்சான் கலந்து சிறப்பித்தாா்.

இந் நிகழ்வில் பேராசிரியா் ஜே.பி திசாநாயக்க, பேராசிரியா் யோகராசா,வும் மொழிகள் பற்றி உரையாற்றினாா்கள். 

அங்கு தொடா்ந்து உரையாற்றி அமைச்சா் 
சிங்களம், தமிழ், ஆகிய இருமொழிகளிளும் இலங்கையில் இரு தாய் மொழிகளாகவும் அரசகரும மொழிகளாகவும் காணப்படுவதோடு இந் இரு மொழிகளும் இவ் நாட்டில் அனைத்து இடங்களிலும் கற்பிக்கப்படுகின்றன. இததுடன்  இரு மொழிகளிலும் தகவல்களை பெற்றுக் கொள்ளக் கூடிய தாக இருக்கும் அதே நேரத்தில் தேசிய சகவாழ்வு மேம்படுத்தப்பட்டு மீண்டும் இந் நாட்டில் இன வேறுபாட்டை இல்லாதொழிக்கின்றது. என அமைச்சா் மனோ கனேசன் அங்கு உரையாற்றினாா்.

பங்களாதேஸ் உயா் ஸ்தாணிகா் - தாரிக் அஹ்சாத்

சர்வதேச தாய்மொழி தினமானது பங்களாதேஸ் அரசுடன் முக்கிய த்துவம் வாய்ந்த தொடா்பொன்றினைக் கொண்டுள்ளது. ஜக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், மற்றும் பண்பாட்டு  அமைப்பின் (யுனஸ்கோ)  1999 நவம்பா் 17ஆம் திகதிய அட்டவனைப்படுத்தப்பட்ட தீர்மாணமொன்றில் பங்களதேஸ் மற்றும் இலங்கை  உட்பட ஏனைய நாடுகளின் இனை அநுசரனையில்  சர்வதேச தாய்மொழி தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1952ஆம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி டாக்காவில் இடம்பெற்ற பொலிசாரின் துப்பாக்கிச  சூட்டினால் கொல்லப்பட்ட வாங்காள மாணவா்களது தியாகத்தை கௌரவிக்கும்  வகையில் இத் தீர்மாணம் பெப்பரவரி 21ஆம் திகதி சர்வசேச தாய்மொழி தினமாக 1956ஆம் ஆண்டு அரசகரும மொழியாக பங்காளி  அந்தஸ்த்து வழங்கப்பட்டது. என உயா் ஸ்தாணிகர் அங்கு குறிப்பிட்டாாா்.







SHARE

Author: verified_user

0 Comments: