பெரிய நீலாவணை காவேரி விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் தரம் ஒன்று மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (07) காவேரி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பி.மதனராஜ் தலைமையில் பெரிய நீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் நடை பெற்றது.
இதன் போது சரஸ்வதி வித்தியாலயத்தில் இவ்வருடம் தரம் ஒன்றில் புதிதாக இணைந்து கொண்டுள்ள 12 மாணவர்களுக்கு தலா மூவாயிரம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் காவேரி விளையாட்டுக் கழகத்தினரால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment