தற்போதைய காலகட்டத்தில் எமது காலாசாரங்கள் சினாபின்னமாகிக் கொண்டிருக்கின்றன. எமது இளைஞர்கள் போதைவஸ்த்துக்களுக்கு அடிமையாகிக் கொண்டு வருகின்றார்கள். இவைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும், எமது இளைஞர் யுவதிகள், தேக அப்பியாசங்களைத் தினமும் செய்ய வேண்டும், இதனூடாக எதிர் காலத்தில் நோயற்ற வாழ்வை மாத்திரமல்லாமல், கலாசாரங்களையும், பேணலாம்.
கிழக்கு மகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மட்.தாளங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி வியாழக் கிழமை (18) மாலை வித்தியாலய அதிபர் சா.மதிசுதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேசத்தில் அதிகளவு போதை வஸ்த்து விற்பனை நிலையங்க உருவாக்கப் பட்டுள்ளன. இவற்றால் இப்பிரதேச இளைஞர்கள், அதிகளவு போதைவஸ்த்துக்களுக்கு உட்படுகின்றார்கள். இவற்றிலிருந்து, எமது எதிர்கால சந்ததியினரைக் காப்பாறுவதற்கு சமூகமும், அணிதிரள வேண்டும்.
இவ்வருடம் முதலாம் தரத்திற்கு சேர்ந்த மாணவர்களின் தொகை மட்டக்களப்பில் குறைவாகவே உள்ளது. கடந்த காலத்தில் நடைபெற்ற யுத்தத்தினால் எமது மக்கள் அழிக்கப் பட்டுள்ளார்கள், இதன் காரணமாகவே தற்போதைய நிலையில் எமது சந்ததியினர் குறைவடைந்து வருகின்றார்கள். கொடிய யுத்தத்தின் காரணமாக இன வீழ்ச்சி ஏற்பட்டிக்கின்றது. பல இன்னல்களைச் சந்தித்த எமது மக்களை கடந்த கால ஆட்சியார்கள் கொடுமைகளையும் செய்துள்ளார்கள்.
எனவே கடந்த கால வடுக்களைச் சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எமது சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் இப்போதிருந்தே எமது மாணவர்களின் கற்றலை மேலோச்சங்கச் செய்ய வேண்டும். கல்வியினால்தான் எமது இழப்புக்களை ஈடு செய்ய முடியும்.பெற்றோர்கள் மாணவர்களை கலைப்பிரிவில் மாத்திரம் கற்பிக்காமால் பொறியியல், விஞ்ஞானம் போன்ற துறைகளிலும் கற்பிக்க வேண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான ஆசிரியர்கள், பற்றாக்குறையாக இருந்து வருகின்றன. என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment