கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த அம்பாரை மாவட்ட மக்கள் பதவிக்காக சோரம் போய் ஏமாற்றப்பட்டார்கள் என்று முன்னாள் மகாண சபை அமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாணசபை .உறுப்பினருமான எம்.எஸ் .சுபைர் தெரிவித்த கருத்து கண்டனத்துக்குரியது.
கடந்த ஆட்சிகாலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக அட்டூழியங்களும் கொடுமைகளும் இஅனியாங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டபோது முஸ்லிம்கள் இதற்கு எதிராக 05 வேளை தொழுகையிலும் அல்லாஹ்விடத்தில் குனுத் ஓதிய பாதுகாப்பு தேடிய வரலாற்றை மறக்க முடியது. மக்களின் உணர்வுகளை உணர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலமை தங்களின் பதவிகளை துறந்து மக்களோடு மக்களாக போராட்டத்தில் இறங்கி மக்களின் மனங்களில் இடம்பிடித்துக் கொண்டார்கள். இதன் வெளிப்பாடே கடந்த தேர்தல் முடிவு காட்டுகின்றது.
கடந்த ஆட்சி எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலமையினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் மீது எழுந்த மக்கள் எழுச்சியின் பிரதிபலிப்பே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அம்பாரை முஸ்லிம் காங்கிரஸ் கோட்டைக்குள் இருந்து அகில இலங்கை மக்கள் கட்சிக்கு சுமார் 34000 வாக்குகள் அளிக்கப்பட்டது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி குருனாகலில் 54532 வாக்குகளும் புத்தளத்தில் 57345 வாக்குகளும் அம்பாரையில் 33272 வாக்குகளும் பெறப்பட்டு மிகவும் சொற்ப வாக்குகளால் மூன்று நாடாளுமன்ற பிரதினிதித்துவம் இழக்கப்பட்டுள்ளது. இதன் போது மூன்று மாவட்ட வேற்பாளர்கள் முக்கிஸ்த்தர்களுடன் கட்சியின் உயர்பீடம் கலதாலோசித்து கிடைக்கபெற்ற ஒரு தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை புத்தளத்துக்கு வழக்கியது.
1994 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைத்த தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மாமனிதர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் சிங்கள இனத்தவரான அஸித்த பெரேரா என்பவருக்கு கொடுத்தார். அது மட்டுமலாமல் அமைச்சுகளில் குவிந்து கிடந்த அதிகாரங்களை கட்சிக்காக உழைத்தவர்களுக்கு தினைக்களங்களின் தலைவர் என்றும் அமைச்சரின் இனைப்பாளர்கள் என்றும் அதிகாரங்களை அடிமட்ட மக்கள் வரை சென்றடையவைத்தார்.
அம்பாரை மாவட்டத்தின் கல்முனை இசம்மாந்துறை போன்ற பிரதேசங்கள் 2000 ஆண்டுவரை அமைச்சரவை அமைச்சுகளை 30 வருடங்களுக்கு மேல் வைத்துக்கொண்டிருந்தன.
அம்பாரை மக்கள் விட்டு கொடுப்புகளுக்கும் இதியாகங்களுக்கும் பரிச்சயமானவர்கள் தலைமைத்துவதுக்கு தலை வணங்கும் பண்புள்ளவர்கள் இதேசிய பட்டியலுக்காக அல்லது இஅமைச்சரவை அமைச்சு அந்தஸ்த்துக்காக அல்லது இதிணைக்கள தலைவர் பதவிக்காக தலமைகளுக்கு எதிராக செயற்பட்டவரலாறு கிடையாது.
கிழக்கு மாகாணசபை உறுப்பினரின் தனிப்பட்ட விடங்களுக்காக அம்பாரை மாவட்ட மக்களை உசுப்பேத்திரத்தை கைவிட்டு மட்டகளப்பு மாவட்டத்தின் காத்தான்குடிக்கும்இகல்குடாவுக்கும் கிடைக்க வேண்டிய தேசிய பட்டியலை பெற்றுக்கொள்ள முயற்சிப்பது நல்லது.
அன்று மாமனிதர் விட்ட இடத்திலிருந்து இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை தனது அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின் அதிகாரங்களை இஉயர்பதவிகளை எமது சமமூகத்துக்கு வழங்கி கொண்டிருப்பதை விமர்சிக்கும் தனது அமைச்சின் கீழ் காணப்பட்ட அமைச்சு பொறுப்புகளை விளங்கி கொள்ளாத முன்னாள் கிழக்கு மாகாணசபை அமைச்சரின் 05 வருடகால அமைச்சின் மக்கள் சேவை எவ்வாறு ஒரு வினைத்திறன் மிக்க சேவையாகயிருந்திருக்கும்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டு பல ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினரின் குற்றசாட்டு அவரின் அரசியல் முதிர்ச்சின்மையை அல்லது அறியாமையை காட்டுகிண்றது.
புதிய அரசாங்கம் உருவாகி புதிய வரவு செலவு திட்டம் நிரைவேற்றப்பட்டு ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரின் குற்றசாட்டடு அரச விடய செயற்பாட்டு நடைமுறை விடயங்களில் முன்னாள் அமைச்சரின் செயற்திறன் எவ்வாறு என்பதனை வெளிக்காட்டுகிறது
அரசாங்க திட்டத்தை நடைமுறை படுத்துவது என்பது ஏரிஎம் (யுவுஆ) இயந்திரம் இபோன்றது என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் விளங்கி கொண்டார்.
எனவே அம்பாரை மாவட்ட மக்கள் மர்ஹும் மாமனிதர் அஸ்ரபின் பாசறையில் வளர்தெடுக்கப்படவர்கள் வேறாக முகாமிட்டுயிருந்தாலூம் தனிப்பட்ட சுயநலவாதிகளின் உசுப்பேத்தல்களுக்கு ஆட்டம் காணமாட்டார்கள்.
முன்னாள் மகாண சபை அமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாணசபை .உறுப்பினருமான எம்.எஸ் .சுபைர் அண்மையில் அறிக்கை உற்றினை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment