எமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இதுவரையில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும், தமிழ் அரசியல் தலைவர்களும், ஒன்றாக இருந்து பேச்சுவார்தையில் ஈடுபடவில்லை. இந்தப்போச்சு நடைபெறவில்லையாயின் இரண்டு சமூயத்திற்கும் ஒன்றும் நடைபெற மாட்டாது. என கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாகத்திற்குட்பட்ட வெல்லாவெளியில் அமைக்கப்பட்ட கலாசார மத்திய நிலையத்தை செவ்வாய்க் கிழமை(16) திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…..
கடந்தகால யுத்தத்தினால் தமிழ் மக்கள் எல்லாவற்றையும், இழந்திருக்கின்றார்கள், பூச்சியத்தில் ஆரம்பித்திருந்த யுத்தம் பூச்சியத்திலே கொண்டு முடித்திருக்கின்றார்கள். தமிழ் மக்கள், மேலும் இழப்பதற்கு ஏதும் கிடையாது. எதிர்வரும் காலத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்படவேண்டிய தேவை மட்டக்களப்பு மாட்டத்திலே உள்ள அனைத்து அரசியல் தலைவர்களுக்கும், உள்ளது. இதிலே தமிழ், முஸ்லிம், அரசியல் தலைவர்கள் என்று கோடுபோட்டு பிரித்துப்பார்த்து செயற்பட்டால் நாம் சமூகத்தை ஏமாற்றுகின்றோம் என்பதற்கு, மாற்றுக் கருத்து கிடையாது.
இன்னும் இனவாத்ததையும், மொழிவாத்தையும், மூலதனமாகக் கொண்டு பேசிக்கொண்டு இருப்போம் என்று சொன்னால் மக்களை அதள பாதாளத்திற்கு இட்டுச் செல்லும். எனவே நல்லாட்சி அரசாங்கத்தில் சிறுபான்மை மக்களின் கலை கலாசாரங்களை அமைச்சர்கள் நேரடியாக வந்து கண்ணுற்று மக்களின் குறை நிறைகளையும் அவதானித்துச் செல்கின்றார்கள்.
சிங்கள சமூகத்தின் மத்தியிலே தற்போது நல்லதொரு பார்வை வந்துள்ளது. கடந்த காலத்திலிருந்து பாதிக்கப்பட்டுப் போயிருக்கின்ற தமிழ் சமூகத்திற்கு சிறுபான்மைச் சமூகத்திற்கு, உதவி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அமைச்சர்கள் மிக நீண்ட தூரம் பயணம் செய்து மட்டக்களப்பிற்கு, வருகின்றார்கள். ஆனால் கடந்த காலங்களில் இவ்வாறு நடைபெறுவதில்லை. இவைகளனைத்தும் நல்லாட்சியினுடைய மாற்றங்களாகும்.
இந்த நாட்டிலே 40 வருடம் மஹிந்த ராஜபக்கஸவும், சந்திரிக்காவும், கோலேச்சி ஆட்சி செய்து அதிலே 15 வருடங்கள் கபினட் அமைச்சராக விருந்த எஸ்.பி.நாவின்ன அமைச்சர் பிள்ளையார் சுழிபோட்டு அந்த ஆட்சியை மாற்ற செயற்பட்டார். அதுபோலவேதான் சர்வதேசத்தினாலும்கூட அசைக்க முடியாது என்ற போர்வையில் செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஸவை ஒரு கணத்திலே புரட்டிப்போட்டவர்கள் சிறுபான்மை சமூகத்தினர்.
எமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இதுவரையில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும், தமிழ் அரசியல் தலைவர்களும், ஒன்றாக இருந்து பேச்சுவார்தையில் ஈடுபடவில்லை. இந்தப்போச்சு நடைபெறவில்லையாயின் இரண்டு சமூயத்திற்கும் ஒன்றும் நடைபெறமாட்டாது.
எனவே ஒவ்வொரு வீட்டுவாசற்படியையும், இந்த நல்லாட்சியின் செயற்பாடுகள் தட்ட வேண்டும். இதற்காக மாவட்டத்திலிருக்கின்ற அனைத்து அரச அதிகாரிகளும் செயற்படுவாகள் என நாம் நம்புகிறோம்.
நாங்கள் தேர்தல்களை மையப்படுத்தி அபிவிருத்திகளை மேற்கொள்வதில்லை, தேர்தல் 5 வருடத்திற்கு ஒருமுறைதான் வருகின்றது. ஆனோல் அபிவிருத்தி என்பது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment