14 Feb 2016

மாணவர்களே எமது எதிர்காலம் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் - அமைச்சர் துரைராசசிங்கம்

SHARE
மாணவ சமுதாயமே எமது இனத்தின் எதிர்காலம் என்பதை அனைத்து தரப்பினரும் உணர்ந்து செயலாற்ற வேண்டும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

வெள்ளிக் கிழமை (12) ஆரையம்பதி சிவமணி வித்தியாலய மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது சிறுவர்கள் கற்க வேண்டும் என்பதில் எமது சமுகம் மிகவு; அக்கறையுடன் செயற்பட வேண்டும். அந்த நிலையில் மாணவர்களும் கற்றலுக்கான ஊக்குவிப்புகளை பயன்படுத்தி கல்வியில் முன்னேறி எமது சமுகத்தையும் முன்னேற்ற வேண்டும்.

புத்தகத்தில் இருக்கும் கல்வியை மூளையினூடாக காகிதத்தில் வரைய வேண்டும் அப்போதுதான் புள்ளிகள் கொடுக்கப்படும். அதற்கு மாணவர்களின் மூளை விருத்திறன் நன்கு செயற்படுத்தப்பட வேண்டும் அது பாடசாலைகளின் மூலமே முடியும் ஆசிரியர்கள் ஒவ்வொரு பிள்ளைகளையும் அவர்களின் திறன் அறிந்து செயலாற்ற ஊக்குவிக்க வேண்டும்.

பிள்ளைகளின் கல்வி வளர்;சியில் ஆசிரியர்கள் மாத்திரம் அல்ல பெற்றோர்களும் அதிக அக்கறை செலுத்த வேண்டும். அவ்வாறு மாணவர்களின் கல்வியில் அக்கறை செலுத்தி அவர்களை விருப்பதுடன் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடச் செய்ய வேண்டும். அவர்களே எமது எதிர்காலம் அதனை உணர்ந்து செயலாற்ற வேண்டும் அப்போதுதான் எமது சமுகத்தின், பிரதேசத்தின், எமது இனத்தின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று தெரிவித்தார். 










SHARE

Author: verified_user

0 Comments: