22 Feb 2016

புலமைப் பரீசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசு

SHARE
புலமைப் பரீசில் பரீட்சையில் சித்தியடைந்த விசன் பண்ட் லங்கா நிறுவனத்தின் பயனாளிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு பிராந்திய முகாமயாளர் நயில்ஸ் தயானந் தலைமையில் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றுது.

பிரதம அதிதியாக பிராந்தியத்திற்கு பொறுப்பான முகாமையாளர் வீ.சந்திரகுமார் கலந்து கொண்டார்.

மேற்படி நிறுவனத்தினால் வருடா வருடம் நடாத்திவரும் இந்த நிகழ்வில் இம்முறை மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுகளுக்கு  உட்பட்ட சுமார் பதினாறு மாணவர்களுக்கு சுமார் மூவாயிரம்  ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் இதன் போது வழங்கிவைக்கப்பட்டது.




SHARE

Author: verified_user

0 Comments: