மட்.களுமுந்தன்வெளி அரசியர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த உடல் திறனாய்வுப் போட்டி வியாழக்கிழமை முற்பகல் 10.01 மணிக்கு களுமுந்தன்வெளி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி பாடசாலையின் அதிபர் சி.சிவபாதம் தலைமையில் நடைபெறும், இந்நிகழ்வில், பட்டிருப்புக் கல்வி வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம், பிரதிக்கல்விப் பணிப்பாளர் மா.உலககேஸ்பரம், கோட்டக்கல்விப் பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன், மட்டக்களப்பு கச்சேரியின் உதவித்திட்டப் பணிப்பாளர் ஆ.சுதாகரன், உடற்கல்விப் பணிப்பாளர் என்.நாகராஜா, மேலும், கிராம பெரியோர்கள், பழைய மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாணவர்கள், பெற்றோர்கள், உட்பட உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
எழுவான் இணையத்தளத்தின் ஊடக அனுசரணையில் நடைபெறும் இவ் உடல் திறனாய்வு நிகழ்வின் ஒளிப்படங்கள், மற்றும், வியோ காட்சிகளை தளத்தில் பார்வையிடலாம்.
0 Comments:
Post a Comment