இன்றய அரசியல் சூழ்நிலை ஒரு வித்தியாசமான சூழலாகக் காணப்படுகின்றது. அந்த வவகையில் ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ரணில் விக்கிரம சிங்கவும், எதர்க் கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டடைப்பின் தலைவர் இரா.சம்மந்தனுமாக இருந்து ஒரு புதுமையான அரசியல் போக்குக் காணப்படுகின்றது.
என உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி, மற்றும், கலாசார அலுவல்கள், அமைச்சர் எஸ்பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.
கலாசார அமைச்சின் 157 லெட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாகத்திற்குட்பட்ட வெல்லாவெளியில் அமைக்கப்பட்ட கலாசார மத்திய நிலையத்தை இன்று செவ்வாய்க் கிழமை(16) திறந்து வைத்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…..
தற்போது காணப்படுகின்ற இந்த நல்லாட்சி அரசாதங்கத்தின் புதுமையான அரசியல் போக்கைப் பயன்படுத்தி நல்ல அரசியல் மர்றங்களைக் கொண்டு வரவேண்டும்.
கலாசாரம் என்பது எலலா இனங்களுககும் உரித்தான ஒன்றாகும், ஒவ்வாரு மதங்களுக்கும், ஒவ்வொரு தனித்துவமான கலாசாம் காணப்படுகின்றது. இவ்வாறான கலாசார விழுமியங்களை மேம்மடுத்துவதற்கு நாங்கள் கடமைப் பட்டுள்ளோம்.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற யுத்தம் தற்போது இந்த நாட்டில் இல்லை. அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் தமிழ் இளைஞர்களின் இல்லங்களில் சிங்கள இளைஞர்கள் தங்க வைக்கப்பட்டு தமிழர்களின் தைப்பொங்கல் பாரம்பரியங்கள் என்ன என்பதை அறிந்து கொண்டார்கள். எனவே அனைத்து விடையங்களிலும் கலாசர பின்னணிகள் அமைந்துள்ளன.
எனவே நமக்குள் எழும், பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயற்பட வேண்டும் கடந்த 30, 40 வருடகாலமாக இந்த நாட்டுக்கு வரமுடியாமல் வெளிநாடுகளிலே வாழ்ந்துவந்தவர்கள் தற்போது மீண்டும் தாய்நாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளார்கள். புலம்பெயர்ந்தவர்கள் மீண்டும் நாட்டுக்கு வந்தவுடன் அவர்களுக்குரிய தேசிய அடையாள அட்டை வழங்குதல், கடவுச்சீட்டு வழங்குதல், இரட்டைப் பிரஜாவுரிமை, போன்ற பல விடையங்களை எமது அமைச்சு மேற்கொள்ள விருகின்றது.
மொழி என்பதுதான் எமது வேறுபாடுகளுக்குக் காரணமாகவிருக்கின்றது. சிங்களவர்களுக்கு தமிழ் தெரியாது தமிழர்களுக்கு சிங்களம் தெரியாது, எனவே அனைவரும் சமாதானமாகவும், ஒற்றுமையுடனும் வாழ்ந்தால், பிரிவினையில்லாத சந்ததியினரை உருவாக்க முடியும். எதிர் காலத்தில் இக்கலாசார நிலையத்தில் மொழி வகுப்புக்களையும் இக்கலாசார நிலையத்தில் நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம்.
தமிழ் கலாசார முறைப்படி போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் கலாசார அலுவர்கள் அமைச்சின் மேலுதிக செயலாளர் பிரதீபா சேனசிங்க உட்பட அரச அதிகரிகள், கலைஞர்கள், என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினத்திடம் அமைச்சரால் காலசார உபகரணங்களும் கையளிக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment