24 Feb 2016

திருவள்ளுவர் குருபூசை தினம் அனுஷ்டிப்பு

SHARE
மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள  ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலத்தில் முதல் முறையாக புதன்கிழமையன்று (24) திருவள்ளுவர் குருபூசை அனுஷ்டிக்கப்பட்டது.
வித்தியாலயத்தின் பிரதி அதிபர் என். இராஜதுரை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிபர் எஸ்.தில்லைநாதன், சிறப்புப் பேச்சாளராக ஆரையம்பதி சிவமணி வித்தியாலய அதிபர் வி.எஸ். கமலநாதன் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தமிழுக்கும், அறிவுக்கும் வழிவகுத்த சான்றோர்களை மாணவர் சமூகம் மகிமைப்படுத்தி வாழும் ஒழுக்க சீலர்களாகத் திகழ வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்வு பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டதாக பிரதி அதிபர் என்.இராஜதுரை தெரிவித்தார்.

நிகழ்வில் திருக்குறள் மனனப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசில் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அதேவேளை கற்பித்த ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு கௌரவமும் அளிக்கப்பட்டது.













SHARE

Author: verified_user

0 Comments: