திருகோணமலை மாவட்டத்தில் அரசியலமைப்பு சீர்திருத்தம் மீதான பொதுமக்களின் யோசனைகளை முன்வைக்கும் நடவடிக்கை இன்று புதன்கிழமையும் நடைபெற்று வருகின்றது.
நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிய குறித்த நடவடிக்கை இன்று முற்பகல் 9.30 முதல் மாலை 4.30 வரை திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.
இதன்போது வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு, மனித உரிமைகள், காணி தொடர்பாக நீதி வழங்க பிராந்திய நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும், நிலம் மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும்,
12 ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும், தொகுதி மற்றும் தொகுதியை 50 க்கு 50 வீதம் என்ற அடிப்படையில் தேர்தல் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்டவை தொடர்பில் பொதுமக்கள் யோசனைகளை முன்வைத்தனர்.
இதில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நேற்றைய தினம் 22 பிரதிநிதிகள் தமது கருத்துகளை முன்வைத்ததோடு, இன்று புதன்கிழமையும் பலர் தமது கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment