நாங்கள் மீண்டும் பயங்கவாதம் உருவாகும் என நினைத்து வடகிழக்கில் வேலை செய்யவில்லை, பணங்கரவாதம் மீண்டும் உருவாக முடியாத அளவிற்கு நாம் மக்கள் மத்தியில் வேலைத் திட்டங்களை முன்நெடுத்து வருகின்றோம். என கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, தெரிவித்துள்ளார்.கடல் வாழ் செட்டை மீன் குஞ்சுகள் இனப் பெருக்க நிலையத்திறாக்கான அடிக்கல் மட்டக்களப்பு கிரான்குளத்தில் ஞாயிற்றுக் கிழமை (07) நடப்பட்டு ஆரப்பித்து வைக்கப் பட்டுள்ளது. இதன்போது பிரதம அதிதியாகக் கலந்ர் கொண்டு அடிக்கல்லை நட்டு வைத்து விட்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார் இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….
இன்று இலங்கைக்கு மிகவும் மக்கியமான நாளாகும் குறிப்பாக உவர் மீன்பிடித்துறைக்கு முக்கியமான தினமாகும். காரணம் இலங்கையில் முதன் முறையாக இன்று இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் நீரிலிருந்து மீன் இனப்பெருக்கம் செய்யும், உற்பத்தி, நிலையத்தை நிருமாணிக்கவுள்ளோம்.
நன்நீர் மீன் வளர்ப்பதை விட உவர் நீர் வளர்பப்தானது மிகவும் கஸ்ட்டமான காரியமாகும். இவ்வாறான கஷட்டமான காரியத்தை இன்று ஆரம்பித்துள்ளோம். இலங்கை நாட்டைவிட கடல் 8 மடங்கு பெரிதாகவுள்ளது இந்நிலையில் 2014 ஆம் ஆண்டில் மாத்திரம் 77 ஆயிரம் அமற்றிக் தொண் மீன் இறக்குமதி செய்துள்ளோம். எனவே கடலிலுள்ள மீனைப் பிடித்து இந்நிலையத்தில் வைத்து குஞ்சு பொரித்து உள்நாட்டிலுள்ள ஏனைய நீர் நிலையங்களிலும் மீன் உற்பத்தியைப் பெருக்குவது இதன் பிரதான நோக்கமாகும்.
2014 ஆம் அண்டு நன்நீர் மீன்வளர்ப்பின் உற்பத்தி 77 ஆயிரம் மெற்றிக் தொண்ணாகும். இவற்றினை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு நாம் முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம்.
மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்காக மிகவிரைவில் 2500 ஏக்கரில் நீரியல் உயிரியல் வளர்ப்பு திட்டத்தை அமுல்ப் படுத்தவுள்ளோம். இவற்றுக்குரிய நிதியும் ஓதுக்கிடு செய்யப் பட்டுள்ளது. எதிர்வரும் 2 மாதத்திற்குள், இவற்றுக்குரிய வேலைகளையும், ஆரம்பிக்கவுள்ளோம்.
எனவே இன்று ஆரம்பிக்கப் பட்டுள்ள இந்த உவர் நீர் உற்பத்தி நிலையத்திலும், எதிர் வரும் 2 மதங்களுக்குள் ஆரம்பிக்கப் படவுள்ள நீரியல் உயில் வளர்ப்புத் திட்டத்திலுமாக, ஆயிரக்கணக்கான தொழில் வாய்ப்புக்கள் உருவாகும். அவ்வாறான தொழில் வாய்ப்புக்கள் இந்த மாவட்ட மக்களுக்கே வளங்கப்படும்.
இனங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தி, அதனூடாக நாட்டின் அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நோக்கமாகவுள்ளது. இம்முறை நடைபெற்ற தேசிய சுதந்திர நின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப் பட்டமைக்கு வடமாகாண முதலமைச்சர் உட்பட தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் பாராட்டுத் தெரிவித்துள்ளார்கள். ஒரு சில தீவிரவாத சிங்களவர்களைத் தவிர ஏனைய அனைத்து சிங்கள மக்களும், இதற்கு வரவேற்பளித்துள்ளார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியில் தமிழ், சிங்களம், ஆகிய இரு மொழிகளும் சமத்துவமாக இருப்பதனால் நமது நாட்டை சிறந்ததொரு நாடாகக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும். கிழக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் கேட்டுக் கொண்டதற்கிணங்க மத்திய அரசில் இருக்கின்ற நாமும் கிழக்கு மாகாணத்துடன் இணைந்து செயற்பட விருப்பம் கொண்டுள்ளோம். எதிர்வரும் 17 ஆம் அதிகதி அனைத்து மாகாண அமைச்சர்கள், மாகாண மீன்பிடி அமைச்சின் செயலாளர்கள், மற்றும் பணிப்பாளர்களை ஒன்றுகூட்டி மாகாண மீன்பிடி அமைச்சினூடாக மத்திய அரசு எவ்வாறு கடமை புரிவது என தீர்க்கமாக முடிவெடுக்கவுள்ளோம். இதனூடாக எதுவித பிரச்சனைகளுமில்லாமல் மீன்பிடி தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளோம்.
மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் சமூகத்தை முன்னேற்றுவதுதான் மத்திய அரசினதும், மாகாண அரசிகளினதும் நோக்கமாகும்.
இலங்கை முழுவதும் ஒரே மாதிரியான அபிவிருத்தியை முன்னெடுப்பதானது, எமது மீன்பிடி அமைச்சும் ஏனைய அமைச்சுக்களுடன் ஒன்று சேர்ந்து, ஏனைய மாகாணங்களில் முன்னெடுக்கப் படுகின்ற வேலைத் திட்டங்கள்போல் வடக்கிலும் கிழக்கிலும் மன்னெடுத்து வருகின்றோம்.
நாங்கள் மீண்டும் பயங்கவாமம் உருவாகும் என நினைத்து வடகி கிழக்கில் வேலை செய்யவில்லை, பயங்கரவாதம் மீண்டும் உருவாக முடியாத அளவிற்கு நாம் மக்கள் மத்தியில் வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
இந்திய மீனவர்கள், எமது வட பகுதிக் கடலில் அத்துமீறி மீன் பிடிப்பதனால் எமது வடபகுதி மீனவர்கள் பெருமளவு இழப்புக்களைச் சந்தித்து வருகின்றார்கள். இதற்குத் தீர்வு காணும் வகையில் இந்திய மத்திய அரசின் பிரதிநிதிகளை சனிக் கிழமை (06) கொழும்பில் வைத்து சந்தித்து எமது வடபகுதி மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பில் எடுத்துரைத்தோம். எனவே மிகவிரைவில் இந்திய மத்திய அரசுடன் இணைந்து இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவுள்ளோம்.
மாறாக அத்துமீறி வரும் இந்திய மீனவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் அவர்களின் வலைகள், படகுகள் எதையும் மீளக் கையளிக்கப் படமாட்டாது.
மீன் பிடி தொடர்பான சட்டங்களிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். ஐரோப்பிய இராச்சியத்தில் மீன்பிடிக்கான தடை தற்போதும் உள்ளது. இந்த தடை எதிர் வரும் தமிழ், சிங்கள புதுவருடத்தில் நீக்கப்படும். என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment